
ஷேன் வார்ன் மரணம்:
ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவானும், ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவருமான ஷேன் வார்ன், தாய்லாந்துக்கு இன்பச்சுற்றுலா சென்ற இடத்தில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். 52 வயதான ஷேன் வார்ன் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ஷேன் வார்ன் உடலில் எந்த காயங்களும் இல்லை. அறை முழுக்க இரத்தக்கறை இருந்தது. எனவே இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கலாம். அவரது மரணம் இயற்கையானதுதான் என்று தாய்லாந்து போலீஸார் தெரிவித்தனர். ஷேன் வார்னின் பிரேத பரிசோதனை அறிக்கையும் அவர் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என்பதை உறுதி செய்தது.
இதையும் படிங்க - Shane Warne இறப்பதற்கு முன் கடைசியாக அனுப்பிய மெசேஜ்..! எந்த காலத்துலயும் டெலிட் பண்ணமாட்டேன் - கில்கிறிஸ்ட்
இந்நிலையில், ஷேன் வார்னுக்கு இதய பாதிப்பு குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முன்னாள் மருத்துவர் பீட்டர் ப்ரூக்னர் கருத்து கூறியுள்ளார்.
மருத்துவர் கூறிய தகவல்:
இதுகுறித்து பேசிய மருத்துவர் பீட்டர் ப்ரூக்னர், வார்னுக்கு இதய நோய் இருந்திருந்தால், அது ஓவர்நைட்டில் தாய்லாந்தில் வந்திருக்க வாய்ப்பில்லை. 20-30 ஆண்டுகால புகைப்பழக்கம், மோசமான டயட் மற்றும் பல காரணங்கள் தான் ஒரு கட்டத்தில் மாரடைப்பை ஏற்படுத்தும். எனவே இது ஒரு பிராசஸ். அதனால் மாரடைப்பு ஓவர்நைட்டில் ஏற்பட வாய்ப்பில்லை. பல ஆண்டுகளாக இதயம் பாதித்ததால் தான் ஏற்பட்டிருக்கும் என்று ஷேன் வார்னின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கல் தான் அவரது இறப்பிற்கு காரணம் என்கிற ரீதியில் மருத்துவர் பீட்டர் ப்ரூக்னர் கருத்து கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க - ICC WTC: பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட்டுக்கு பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்