அந்த பையன் சரியா வரமாட்டான்.. இவருதான் சரியான ஆப்சன்..! ரோஹித்தின் ஓபனிங் பார்ட்னர் விஷயத்தில் கவாஸ்கர் கறார்

Published : Mar 10, 2022, 04:48 PM IST
அந்த பையன் சரியா வரமாட்டான்.. இவருதான் சரியான ஆப்சன்..! ரோஹித்தின் ஓபனிங் பார்ட்னர் விஷயத்தில் கவாஸ்கர் கறார்

சுருக்கம்

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் ஓபனிங் பார்ட்னர் விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.  

தொடக்க ஜோடி:

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் தான், ரோஹித் சர்மாவின் ஓபனிங் பார்ட்னர். கேஎல் ராகுல் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாததால் மயன்க் அகர்வால், ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கி ஆடினார்.

மயன்க் அகர்வால் - ஷுப்மன் கில் ஆகிய இருவருமே டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், ஷுப்மன் கில்லை பென்ச்சில் உட்காரவைத்துவிட்டு மயன்க் அகர்வாலை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டது இந்திய அணி நிர்வாகம். 

இதையும் படிங்க - Shane Warne இறப்பதற்கு முன் கடைசியாக அனுப்பிய மெசேஜ்..! எந்த காலத்துலயும் டெலிட் பண்ணமாட்டேன் - கில்கிறிஸ்ட்

மயன்க் அகர்வால் vs ஷுப்மன் கில்:

ஆனால் ஷுப்மன் கில்லைத்தான் தொடக்க வீரராக இறக்கிவிட்டிருக்க வேண்டும். மயன்க் அகர்வாலைவிட ஷுப்மன் கில்லுக்குத்தான் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்று சிலர் கருத்து கூறுகின்றனர். ஷுப்மன் கில்லும் இந்திய அணிக்காக ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங் செய்திருந்தாலும், மயன்க் அகர்வால் தான் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கருத்து கூறியுள்ளார்.

கவாஸ்கர் கருத்து:

இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர், ஷுப்மன் கில் கடந்த 2 மாதங்களாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடவில்லை. ரஞ்சி போட்டியில் கூட ஆடவில்லை. அவருக்கு மெட்ச் பிராக்டீஸே இல்லை. கில் திறமையான பேட்ஸ்மேன் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் ஃபார்மும் முக்கியம்.

இதையும் படிங்க - IPL 2022: ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ஆஃப்கான் அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

அதேவேளையில், மயன்க் அகர்வால் இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி பலமுறை பெரிய ஸ்கோர் செய்திருக்கிறார்.  வெளிநாடுகளில் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை என்றாலும், மயன்க் இந்தியாவில் சதம் - இரட்டை சதம் அடித்திருக்கிறார். எனவே ரோஹித்துடன் அவர் தான் கண்டிப்பாக தொடக்க வீரராக இறங்கவேண்டும். 3ம் வரிசையில் ஹனுமா விஹாரி. அவர் எந்த தவறுமே செய்யவில்லை. எனவே ஹனுமா விஹாரி தான் 3ம் வரிசையில் இறங்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?