Shane Warne இறப்பதற்கு முன் கடைசியாக அனுப்பிய மெசேஜ்..! எந்த காலத்துலயும் டெலிட் பண்ணமாட்டேன் - கில்கிறிஸ்ட்

Published : Mar 10, 2022, 03:50 PM IST
Shane Warne இறப்பதற்கு முன் கடைசியாக அனுப்பிய மெசேஜ்..! எந்த காலத்துலயும் டெலிட் பண்ணமாட்டேன் - கில்கிறிஸ்ட்

சுருக்கம்

ஷேன் வார்ன் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தனக்கு அனுப்பிய மெசேஜை எப்போதுமே டெலிட் செய்யமாட்டேன் என்று ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.  

ஷேன் வார்ன் மறைவு:

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது ஷேன் வார்னின் மறைவு. ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவானும், ஆல்டைம் பெஸ்ட் ஸ்பின்னர்களில் ஒருவருமான லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 

தாய்லாந்துக்கு இன்பச்சுற்றுலா சென்ற ஷேன் வார்ன், அங்கு இருக்கும் அவரது வில்லாவில் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்து, கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தினார். 

இதையும் படிங்க - IPL 2022: ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ஆஃப்கான் அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

ஷேன் வார்னுக்கு இரங்கல்:

சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ராகுல் டிராவிட், ஜெயசூரியா, ஜாக் காலிஸ் உள்ளிட்ட பல தலைசிறந்த வீரர்களை தெறிக்கவிட்டவர் வார்ன். அவரது காலத்தால் அழியாத சிறந்த ஸ்பின் பவுலிங்கின் வீடியோக்களை பகிர்ந்து, அவருக்கு இரங்கல் தெரிவித்தனர் ரசிகர்கள். அவருக்கு புகழாரம் சூட்டி பல முன்னாள், இந்நாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது திறமையையும், அவருடனான நினைவுகளையும் நினைவுகூர்ந்து வருத்தம் தெரிவித்தனர்.

ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகிய ஷேன் வார்னுடன் இணைந்து ஆடிய, அவருக்கு நெருக்கமான வீரர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தனர்.

கில்கிறிஸ்ட்டுக்கு ஷேன் வார்ன் அனுப்பிய கடைசி மெசேஜ்:

இந்நிலையில், ஷேன் வார்ன் தனக்கு அனுப்பிய கடைசி டெக்ஸ்ட் மெசேஜ் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் ஆடம் கில்கிறிஸ்ட். 1996 முதல் 2007ம் ஆண்டு வரை ஷேன் வார்னுடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்காக ஆடியவர் ஆடம் கில்கிறிஸ்ட். ஷேன் வார்னின் மாயாஜால ஸ்பின் பவுலிங்கிற்கு விக்கெட் கீப்பிங் செய்தவர் என்ற முறையில், வார்னின் ஸ்பின் பவுலிங் திறமையை மற்றவர்களை விட அதை மிக அதிகமாக அறிந்தவர் கில்கிறிஸ்ட் தான்.

இதையும் படிங்க - கடைசிவரை ஷேன் வார்னிடம் நான் இதை சொல்லலயே.. இப்ப சொல்லணும்னு நெனக்கிறேன்; அவர் இல்லையே! கலங்கிய பாண்டிங்

ஷேன் வார்ன் தனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ் குறித்து பேசியுள்ள ஆடம் கில்கிறிஸ்ட்,  ஷேன் வார்னிடம் ஒரு வாரத்திற்கு முன்புதான் பேசினேன். அவரிடமிருந்து ஒரு அருமையான டெக்ஸ்ட் மெசேஜ் எனக்கு வந்தது. அவர் இறப்பதற்கு சுமார் 8 மணி நேரத்திற்கு முன் அந்த மெசேஜை எனக்கு அனுப்பியிருந்தார். என்னை அவர் செல்லமாக சர்ச்சி என்ற பட்டப்பெயரை சொல்லித்தான் அழைப்பார். ”சர்ச்சி(கில்கிறிஸ்ட்), ராட் மார்ஷுக்கு(ஷேன் வார்ன் இறப்பதற்கு முந்தைய நாள் இறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்) நீ செலுத்திய அஞ்சலி அருமை. என்னுடைய குழந்தைப்பருவ ஹீரோ ராட் மார்ஷுக்கு பக்கத்தில் நாம் இருவருமே செல்லவில்லை. வெல்டன் சார்” என்று எனக்கு வார்ன் மெசேஜ் செய்திருந்தார். அந்த மெசேஜை நான் ஒருபோதும் டெலிட் செய்யமாட்டேன் என்று கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?