
இந்தியா - நியூசிலாந்து மோதல்:
மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது. முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா மகளிர் அணி, இன்றைய போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.
இதையும் படிங்க - IPL 2022: ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக ஆஃப்கான் அதிரடி பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மகளிர் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் சாட்டெர்த்வெயிட் அபாரமாக ஆடி 75 ரன்களை குவித்தார். அமெலியா கெர் என்ற வீராங்கனையும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் கெர் அரைசதத்திற்கு பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சரியாக 50 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் விக்கெட் கீப்பர் மார்டின் 41 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 260 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.
இதையும் படிங்க - வார்ன் பெஸ்ட் ஸ்பின்னர் இல்லனு நான் சொன்னது என் நேர்மையான கருத்து; சொன்ன நேரம் தான் தவறானது! கவாஸ்கர் விளக்கம்
இந்திய மகளிர் அணி பேட்டிங் சொதப்பல்:
261 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியில் ஹர்மன்ப்ரீத் கௌர் மட்டுமே சிறப்பாக விளையாடி 71 ரன்களை குவித்தார். அவரைத்தவிர மற்ற அனைத்து வீராங்கனைகளுமே சொற்ப ரன்களில் வெளியேறினார். ஸ்மிரிதி மந்தனா(6), தீப்தி சர்மா (5), மிதாலி ராஜ் (31) ஆகிய முக்கியமான வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 46.4 ஓவரில் 198 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
இதையடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து மகளிர் அணி.