
முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி:
இந்தியா - இலங்கை இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் வரும் 12ம் தேதி தொடங்கி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இதையும் படிங்க - அந்த பையன் சரியா வரமாட்டான்.. இவருதான் சரியான ஆப்சன்..! ரோஹித்தின் ஓபனிங் பார்ட்னர் விஷயத்தில் கவாஸ்கர் கறார்
இந்திய அணியில் ஒரு மாற்றம்:
பெங்களூருவில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்படும். 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டு, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். எனவே 2வது போட்டிக்கான ஆடும் லெவனில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு அக்ஸர் படேல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க - வார்ன் பெஸ்ட் ஸ்பின்னர் இல்லனு நான் சொன்னது என் நேர்மையான கருத்து; சொன்ன நேரம் தான் தவறானது! கவாஸ்கர் விளக்கம்
இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்).