உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்துள்ளனர்.
அகமதாபாத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை முதல் லீக் போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இதில், டேவிட் மலான் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன்களில் வெளியேறினார்.
For the first time in World Cup history - All the 11 players scored runs in double digits. pic.twitter.com/e2RVLb33ku
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
4,658 ODI matches in history so far.
First time ever all the 11 batters of a team scored runs in double digits. pic.twitter.com/UYP1oWDf0S
ஹாரி ப்ரூக் 25 ரன்கள் எடுக்க, மொயீன் அலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் 43 ரன்கள் சேர்த்து நடையை கட்டினார். ஒரு புறம் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 77 ரன்களில் வெளியேறினார். லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்னிலும், சாம் கரண் 14 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக அடில் ரஷீத் 15 ரன்னுடனும், மார்க் வுட் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலமாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 282 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
பயிற்சிக்கான புதிய ஜெர்சியில் இந்திய அணி – ஜெர்சியிலும் காவியா? விமர்சனத்திற்கு உள்ளான நியூ ஜெர்சி!
இதன் மூலமாக உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக ஒரு அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்துள்ளனர். அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. அதுமட்டுமின்றி இதுவரையில் நடந்த 4568 ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக ஒரு அணியின் 11 பேட்டர்களும் இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தது முதல் முறையாகும்.
England vs New Zealand: உலகக் கோப்பைக்கான டிராபியை தூக்கி வந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!
நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் மேட் ஹென்றி 3 விக்கெட் கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டிரெண்ட் போல்ட் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதில், மிட்செல் சாண்ட்னர் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி ஒரு பவுண்டரி கூட கொடுக்காத வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ENG vs NZ: 2023 உலகக் கோப்பை – முதல் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஜானி பேர்ஸ்டோவ்!
சுருக்கம்:
உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த வீரர் – ஜானி பேர்ஸ்டோவ்
இங்கிலாந்து அணியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் – ஜோ ரூட்
அதிக சிக்சர் அடித்த வீரர் – 2 சிக்ஸர்
அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் – ஜானி பேர்ஸ்டோவ் 4, ஜோ ரூட் 4, ஹாரி ப்ரூக் 4, லியாம் லிவிங்ஸ்டன் 3.
முதல் முறையாக அணியில் இடம் பெற்ற 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்கள் குவித்துள்ளனர்.
நியூசிலாந்து அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் – மேட் ஹென்றி 3 விக்கெட்.
நியூசிலாந்து அணியில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் பந்து வீசிய வீரர் – மிட்செல் சான்ட்னர்.
2023 உலகக் கோப்பை தொடரில் முதல் விக்கெட் கைப்பற்றிய வீரர் – மேட் ஹென்றி