கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழந்து 282 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. இதில், ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ரன்கள் சேர்த்தனர்.
பயிற்சிக்கான புதிய ஜெர்சியில் இந்திய அணி – ஜெர்சியிலும் காவியா? விமர்சனத்திற்கு உள்ளான நியூ ஜெர்சி!
இதில், மலான் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மேட் ஹென்றி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு ஜோ ரூட் களமிறங்கினார். ஆனால், அதற்குள்ளாக ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மிட்செல் சாண்டனர் பந்தில் டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் பவுண்டரி மற்று முதல் சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை பேர்ஸ்டோவ் படைத்தார்.
England vs New Zealand: உலகக் கோப்பைக்கான டிராபியை தூக்கி வந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்!
அதன் பிறகு ஹாரி ப்ரூக் களமிறங்கினார். அவர் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் சேர்த்த நிலையில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 11 ரன்களில் வெளியேற கேப்டன் ஜோஸ் பட்லர் களமிறங்கினார். ஒரு கட்டத்தில் ஜோ ரூட் இன்றைய போட்டியில் முதல் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், 15 மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அரைசதம் அடித்துள்ளார். அதோடு, ஒரு நாள் கிரிக்கெட்டில் 37ஆவது அரைசதம் அடித்துள்ளார்.
ENG vs NZ: 2023 உலகக் கோப்பை – முதல் சிக்ஸர் அடித்து ரன் கணக்கை தொடங்கிய ஜானி பேர்ஸ்டோவ்!
இந்தப் போட்டியில் வலது கை பேட்ஸ்மேனான ரூட், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார். பட்லர் 43 ரன்கள் எடுத்த நிலையில், ஹென்றி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த பின்வரிசை வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்னிலும், சாம் கரண் 14 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக அடில் ரஷீத் 15 ரன்னுடனும், மார்க் வுட் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலமாக இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 282 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் மேட் ஹென்றி 3 விக்கெட் கைப்பற்றினார். மிட்செல் சாண்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். டிரெண்ட் போல்ட் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதில், மிட்செல் சாண்ட்னர் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி ஒரு பவுண்டரி கூட கொடுக்காத வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சுருக்கம்:
உலகக் கோப்பை 2023 தொடரின் முதல் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த வீரர் – ஜானி பேர்ஸ்டோவ்
இங்கிலாந்து அணியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர் – ஜோ ரூட்
அதிக சிக்சர் அடித்த வீரர் – 2 சிக்ஸர்
அதிக பவுண்டரி அடித்த வீரர்கள் – ஜானி பேர்ஸ்டோவ் 4, ஜோ ரூட் 4, ஹாரி ப்ரூக் 4, லியாம் லிவிங்ஸ்டன் 3.
நியூசிலாந்து அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர் – மேட் ஹென்றி 3 விக்கெட்.
நியூசிலாந்து அணியில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல் பந்து வீசிய வீரர் – மிட்செல் சான்ட்னர்.
2023 உலகக் கோப்பை தொடரில் முதல் விக்கெட் கைப்பற்றிய வீரர் – மேட் ஹென்றி
World Cup 2023: அங்கு என்ன தெரிகிறது? வடிவேலு பட மீம்ஸ் உருவாக காரணமான ஜோஸ் பட்லர்!