இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுத்த இங்கிலாந்து – கடைசி டி20 போட்டியில் வெற்றி பெறுமா இந்திய மகளிர் அணி?

By Rsiva kumarFirst Published Dec 10, 2023, 6:59 PM IST
Highlights

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் 38 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 2ஆவது டி20 போட்டி நேற்று நடந்தது. இதில், இந்திய மகளிர் அணி 80 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2007 டி20 உலகக் கோப்பைக்கு பிறகு முதல் முறையாக டர்பனில் டி20 போட்டியில் விளையாடும் இந்தியா!

Latest Videos

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங் தேர்வு செய்தார். மேலும், ஏற்கனவே தொடரை கைப்பற்றிய நிலையில், இளம் வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளார்.

Virat Kohli Question: அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வில் இடம் பெற்றிருந்த விராட் கோலி தொடர்பான கேள்வி!

அதன்படி, டேனியல் வியாட், நாட் ஸ்கிவர் பிரண்ட், சாரா கிளென் மற்றும் லாரன் பெல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மையா பவுச்சியர், டேனியல் கிப்சன், பெஸ் கீத் மற்றும் மஹிமா கவுர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே தொடரை இழந்த இந்திய மகளிர் அணியானது இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில மாற்றங்களை செய்துள்ளது. பூஜா வஸ்த்ரேகர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அமன்ஜோத் கவுரை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

India vs Canada, Hockey: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கனடாவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

இந்திய மகளிர் அணி:

ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தீப்தி சர்மா, ஷ்ரேயங்கா பட்டீல், அமன்ஜோத் கவுர், டைட்டஸ் சாது, ரேணுகா தாகூர் சிங், சைகா இஷாக்.

இங்கிலாந்து மகளிர் அணி:

சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, ஹீதர் நைட் (கேப்டன்), ஆமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), ஃப்ரேயா கெம்ப், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், மையா பவுச்சியர், டேனியல் கிப்சன், பெஸ் கீத், மஹிமா கவுர்.

India vs South Africa 1st T20I: ரிங்கு சிங் வேகமாக ஓட என்ன காரணம்? உண்மையை சொன்ன சுப்மன் கில்!

click me!