
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று லண்டன் லார்ட்ஸில் நடந்துவருகிறது.
இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்தும் களமிறங்கின.
இதையும் படிங்க - புஜாராவின் பவுலிங் திறமையை இந்திய அணி யூஸ் பண்ணாம மிஸ் பண்ணிடுச்சே..! என்ன அருமையா வீசுறார்.. வைரல் வீடியோ
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, க்ரைக் ஓவர்டன், டேவிட் வில்லி, ப்ரைடன் கர்ஸ், ரீஸ் டாப்ளி.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் கடந்த போட்டியை போல் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதனால் நிதானமாக பேட்டிங் ஆடினர். ஆனாலும் ராயை 23 ரன்னில் வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா.
இதையும் படிங்க - எங்க காலத்தில் கோலி மாதிரி ஒரு பிளேயரை பார்த்ததில்ல.. அவரை கண்டிப்பாக T20 WC அணியில் எடுக்கணும் - கிர்மானி
ஜோ ரூட் 11 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 38 ரன்னிலும், கேப்டன் பட்லர் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டோக்ஸ் 21 ரன்னில் சாஹலின் பந்தில் ஆட்டமிழந்தார். ரூட், ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகிய மூவரையும் சாஹல் வீழ்த்தினார். பட்லரை 4 ரன்னில் ஷமி வீழ்த்தினார்.
லிவிங்ஸ்டோன் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 148 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. அதன்பின்னர் மொயின் அலியும் டேவிட் வில்லியும் சிறப்பாக பேட்டிங் ஆடினர். இவர்கள் இருவரும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர்.
மொயின் அலியை 47 ரன்களுக்கு சாஹல் வீழ்த்த, டேவிட் வில்லியை 41 ரன்களுக்கு பும்ரா வீழ்த்தினார். 49 ஓவரில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் சாஹல், ஹர்திக் பாண்டியா அபாரமாக பந்துவீசினர். சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணி 247 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது.