இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா, கவுண்டி கிரிக்கெட்டில் பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. இந்தியாவிற்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6792 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தூணாக திகழ்ந்துவந்த புஜாரா, இடையில் சரியாக ஆடாததால் இந்திய அணியில் இடத்தை இழந்தார். இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக அபாரமாக ஆடியதன் விளைவாகத்தான் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தார்.
இதையும் படிங்க - எங்க காலத்தில் கோலி மாதிரி ஒரு பிளேயரை பார்த்ததில்ல.. அவரை கண்டிப்பாக T20 WC அணியில் எடுக்கணும் - கிர்மானி
அந்தவகையில், புஜாராவிற்கு கவுண்டி தொடர் மிகவும் உதவிகரமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடிவிட்டு, அங்கேயே இருந்து கவுண்டி கிரிக்கெட்டில் தான் ஆடிவருகிறார் புஜாரா.
இதையும் படிங்க - இது என்னங்க அநியாயமா இருக்கு.. சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான விதி மாற்றத்தை வலியுறுத்தும் அஷ்வின்
சசெக்ஸ் அணிக்காக பேட்டிங்கில் மட்டுமல்லாது புஜாரா பவுலிங்கிலும் பங்களிப்பு செய்துவருகிறார். சசெக்ஸ் அணிக்காக புஜாரா பவுலிங் செய்த வீடியோ வைரலாகிவருகிறது. புஜாரா லெக் ஸ்பின் பந்துவீசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
An over of bowling. 🚨 pic.twitter.com/I4PdyeCxCx
— Sussex Cricket (@SussexCCC)புஜாராவின் பந்துவீசும் திறமையை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ளவில்லை. இந்தியாவிற்காக புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவர் மட்டும் பந்துவீசியிருக்கிறார். புஜாரா பந்துவீசுவதை பார்க்கையில், அவரது பவுலிங் திறமையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக இந்திய அணி பயன்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது.