ஊக்கமருந்து விவகாரத்தில் வங்கதேச வீரர் ஷாஹிதுல் இஸ்லாமுக்கு தடை..!

Published : Jul 14, 2022, 07:32 PM ISTUpdated : Jul 14, 2022, 07:33 PM IST
ஊக்கமருந்து விவகாரத்தில் வங்கதேச வீரர் ஷாஹிதுல் இஸ்லாமுக்கு தடை..!

சுருக்கம்

ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் ஷாஹிதுல் இஸ்லாம் என்ற வங்கதேச வீரருக்கு 10 மாதங்கள் தடை விதித்துள்ளது ஐசிசி.  

வங்கதேசத்தை சேர்ந்த 27 வயது வீரர் ஷாஹிதுல் இஸ்லாம். வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹிதுல், வங்கதேசத்திற்காக ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அவர் ஆடிய ஒரு டி20 போட்டியில் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அந்த குறிப்பிட்ட தொடரில் பாகிஸ்தானிடம் 0-3 என தோல்வியடைந்தது வங்கதேச அணி.

இதையும் படிங்க - ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்பட்ட விராட் கோலி..? முடிவுக்கு வரும் டி20 கெரியர்..?

வங்கதேசத்திற்காக ஒரேயொரு டி20 போட்டியில் மட்டுமே ஆடிய ஷாஹிதுல் இஸ்லாம் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினார். கடந்த மே 28ம் தேதி இவர் மீது ஊக்கமருந்து புகார் எழுந்தது. க்ளோமிஃபீன் என்ற ஐசிசியால் தடை செய்யப்பட்டதை அவர் எடுத்துக்கொண்டது உறுதியானது.

இதையும் படிங்க - இது என்னங்க அநியாயமா இருக்கு.. சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான விதி மாற்றத்தை வலியுறுத்தும் அஷ்வின்

எனவே அவருக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட 10 மாதங்கள் தடை விதித்துள்ளது ஐசிசி. கடந்த மே 28ம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு இந்த தடை அமல்படுத்தப்பட்டது என்பதால் அடுத்த ஆண்டு மார்ச் 28ம் தேதி வரை ஷாஹிதுல் இஸ்லாம் சர்வதேச போட்டிகளில் ஆடமுடியாது. அதன்பின்னர் அவர் ஆடலாம்.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!