இந்தியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும், இங்கிலாந்து 253 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஷ்ரேயாஸ் ஐயரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். அதன் பிறகு அவரும் 29 ரன்களில் நடையை கட்டினார். அக்ஷர் படேல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சுப்மன் கில்லின் சதம் – இங்கிலாந்துக்கு 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த டீம் இந்தியா!
சுப்மன் கில் நிதானமாக விளையாடி 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 29 ரன்கள் எடுக்க இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 398 ரன்கள் குவித்து 399 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட் கைப்பற்றினார். ரெஹான் அகமது 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டும், சோயிப் பஷீர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து 399 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
7 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில், நம்பர் 3ல் சதம் விளாசி சாதனை!
இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி புதிய பந்தில் பவுண்டரியாக அடித்து ரன்கள் குவித்தனர். ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் மாறி மாறி ஓவர்கள் வீச துணிச்சலாக பவுண்டரியாக விளாசினர். இதையடுத்து விக்கெட் எடுக்க குல்தீப் யாதவ்வை கொண்டு வந்தார்.
அவரும் விக்கெட் எடுக்காத நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்ஷர் படேல் இருவரும் மாறி மாறி பந்து வீசினர். இதில், அஸ்வின் பென் டக்கெட் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். India vs England 2nd Test: டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ஆவது சதம் – இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட சுப்மன் கில்! முதல் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், ஜாக் கிராவ்லி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இதே நிலையை இங்கிலாந்து தொடர்ந்தால் இந்தப் போட்டியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.