இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸ்ல் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்து 399 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 143 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
7 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சுப்மன் கில், நம்பர் 3ல் சதம் விளாசி சாதனை!
இதில், ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஷ்ரேயாஸ் ஐயரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார். அதன் பிறகு அவரும் 29 ரன்களில் நடையை கட்டினார். அக்ஷர் படேல் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த சுப்மன் கில் இந்தப் போட்டியில் நிதானமாக விளையாடி 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 29 ரன்கள் எடுக்க இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலமாக 398 ரன்கள் குவித்து 399 ரன்களை இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.