தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி தற்போது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி வான்கடே மைதானத்தில் நடந்தது. அதன் பிறகு தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை போட்டி நடக்கிறது.
மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறு: டேவிட் வார்னர் சதம் அடிக்க காரணமாக உசாமா மிர்!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். கடந்த 3 போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளார். மேலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகியோருக்குப் பதிலாக டேவிட் வில்லி மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதே போன்று தென் ஆப்பிரிக்கா அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டெம்பா பவுமாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவருக்குப் பதிலாக எய்டன் மார்க்ரம் கேப்டனாக செயல்படுகிறார். பவுமாவிற்குப் பதிலாக ரீஸா ஹென்ட்ரிக்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷீத், ஜோ ரூட், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லி, ஹாரி ப்ரூக், கஸ் அட்கின்சன்.
தென் ஆப்பிரிக்கா:
கெரால்டு கோட்ஸி, குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, கஜிசோ ரபாடா, ரஸிவ் வான் டெர் டுசென்.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 69 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 30 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 33 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், இரு அணிகளும் 7 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 4 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 3 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியுள்ளன. கடைசியாக நடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.