இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் மும்பை வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது.
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முன்னதாக நடந்த போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணியிடமும், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணியிடமும் தோல்வி அடைந்தன.
2024 ஐபிஎல் வெளிநாடுகளில் நடக்க வாய்ப்பில்லை – இந்தியாவில் தான் நடத்தப்படும் – அருண் சிங் துமல்!
தென் ஆப்பிரிக்கா 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்திலும், இங்கிலாந்து 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திலும் உள்ளன. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கும் இடையிலான 20ஆவது லீக் போட்டியானது இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்த மைதானத்தில் கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது.
மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் செய்த தவறு: டேவிட் வார்னர் சதம் அடிக்க காரணமாக உசாமா மிர்!
தற்போது மீண்டும் உலகக் கோப்பை போட்டி இன்று நடக்கிறது. ஆனால், ஐபிஎல் போட்டிகள் நடத்துள்ளன. இந்த வான்கடே மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலகக் கோப்பை சாம்பியனானது.
AUS vs PAK: மாமனார் சாதனையை சமன் செய்த மருமகன் – ஆஸி.க்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஷாகிடி அஃப்ரிடி
இந்த நிலையில் தான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த மைதானத்தில் உலகக் கோப்பை 20ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இதில், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னதாக இரு அணிகளும் 69 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 30 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 33 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் வெற்றி பெற்றுள்ளன.
மேலும், இரு அணிகளும் 7 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 4 போட்டிகளில் இங்கிலாந்து அணியும், 3 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியுள்ளன. கடைசியாக நடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.