மோசமான கார் விபத்தில் சிக்கிய ஃப்ளிண்டாஃப்.. நல்வாய்ப்பாக உயிர்பிழைத்தார்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

By karthikeyan VFirst Published Dec 15, 2022, 3:53 PM IST
Highlights

இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப் மோசமான கார் விபத்தில் சிக்கி, ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
 

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப். இங்கிலாந்து அணியின் ஆல்டைம் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மற்றும் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஃப்ளிண்டாஃப்.

1998ம் ஆண்டிலிருந்து 2009 வரை இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஃப்ளிண்டாஃப், 79 டெஸ்ட், 141 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். பேட்டிங்கில் 7000க்கும் அதிகமான ரன்களை குவித்திருப்பதுடன், பவுலிங்கில் 400 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்..! புதிய கேப்டன் நியமனம்

இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான 45 வயது ஆண்ட்ரூ ஃப்ளிண்டாஃப், டாப் கியர் என்ற நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின்போது பனிப்பகுதியில் அதிவேகத்தில் கார் ஓட்டியுள்ளார். அப்போது அதிவேகத்தில் சென்ற அவரது கார் கடும் விபத்துக்குள்ளானது. மிக மோசமான விபத்தில் சிக்கிய ஃப்ளிண்டாஃப், உடனடியாக ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். 

பிசிசிஐக்கு நிகரான ஊதியம், வீடு, கார் எல்லாம் தருகிறோம்..! அயர்லாந்தின் கோரிக்கையை நிராகரித்த சஞ்சு சாம்சன்

மோசமான விபத்தில் சிக்கினாலும் நல்வாய்ப்பாக அவரது உயிருக்கு ஆபத்தில்லை. மோசமான கண்டிஷனில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துவருகின்றனர். 
 

click me!