இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 13ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.
உலகக் கோப்பையின் 13ஆவது லீக் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த உலகக் கோப்பை தொட்ரில் இதுவரையில் நடந்த 2 போட்டிகளில் ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று ஆப்கானிஸ்தான் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.
IND vs PAK: நட்புனா என்னானு தெரியுமா? பாபர் அசாமிற்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!
இதுவரையில் இரு அணிகளும் மோதிய 2 ஒரு நாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தான் வெற்றி பெற்றுள்ளது. தற்போது முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன. அருண் ஜெட்லி மைதானத்தில் இதுவரையில் 30 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.
இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 14 முறை வெற்றி பெற்றுள்ளது. பின்னர், சேஸ் செய்த அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் ஆவரேஜ் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 231 ஆகும். ஆவரேஜ் 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 209 ஆகும். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் 428/5, 50 ஓவர்கள். குறைந்தபட்ச ஸ்கோர் 99/10, (27.1 ஓவர்). சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 281/4, (40.5 ஓவர்கள்).
இங்கிலாந்து பிளேயிங் 11:
டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோட், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக் அல்லது பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ் அல்லது டேவிட் வில்லி, அடில் ரஷீத், மார்க் வுட், ரீஸ் டாப்ளே
ஆப்கானிஸ்தான் பிளேயிங் 11:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன், ரஹ்மத் ஷா, ஹஷ்மதுல்லா ஷாஹிடி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரன், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஃபாரூக்கி, ரஷீத் கான்.