பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்து முடித்ததும் நடுவரிடம் தனது பைசெஸ்ப்ஸை காட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12ஆவது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், பாபர் அசாம் 49 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் 16 ரன்களிலும், விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 23 ஓவர்களிலேயே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா 86 ரன்களில் ஆட்டமிழந்து அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.
கோலி, ரோகித் சர்மா வரிசையில் இடம் பிடித்த பும்ரா: பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆட்டநாயகன்!
எனினும் இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 300 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் ரோகித் சர்மா சிக்ஸர் அடித்ததும் நடுவரிடம் சென்று தனது பைசெப்ஸை காட்டும் காட்சியை ஒட்டு மொத்த ரசிகர்களும் பார்த்து ரசித்துள்ளனர். ஆம், இந்தளவிற்கு தன்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று பைசெப்ஸை காட்டிய ரோகித் சர்மாவைப் பார்த்து நடுவர் சிரித்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னர் வந்த கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசியாக ஷ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி அடித்து உலகக் கோப்பையில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். அதோடு, இந்திய அணியின் வெற்றிக்கும் வித்திட்டார். இறுதியாக இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்க் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக 8ஆவது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
Rohit Sharma, FLEX that bicep to whole WORLD because you are SUPERSTAR!
The greatest Six Hitter game ever witnessed.🐐 pic.twitter.com/AtfQrwmzjB