IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

Published : Mar 29, 2023, 09:48 AM ISTUpdated : Mar 29, 2023, 09:51 AM IST
IPL 2023: யார் யார் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார்கள் தெரியுமா?

சுருக்கம்

ஐபிஎல் தொடருக்கான 16ஆவது சீசன் வரும் 31 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் திருவிழாவின் 16ஆவது சீசன் நாளை மறுநாள் (31 ஆம் தேதி) மிகவும் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. 10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரின் முதல் சீசனில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

முதல் போட்டி:

மார்ச் 31 ஆம் தேதி நாளை மறுநாள் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பிரமாண்டமாக தொடக்க விழாவும் தொடங்க உள்ளது. இதில், பிரபலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரீனா கைஃப், டைகர் ஷெராஃப், அரிஜித் சிங் ஆகியோர் கலந்து கொண்டு டான்ஸ் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. 

ஐபிஎல் இந்த 2 சாதனையும் இவங்களால தான் முடியும்; இன்னும் யாரும் முறியடிக்கல!

குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்:

கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரையில் 16 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 12 போட்டிகளில் வெற்றியை கண்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரையில் 2 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 2 போட்டியிலுமே குஜராத் டைட்டன்ஸ் தான் வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு வரையில் மும்பை,புனே, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் மட்ட்டும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு அப்படி ஒன்றும் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில் அந்ததந்த அணிகளின் ஹோம் மைதானங்களிலும், எதிரணியின் மைதானங்களிலும் 7, 7 போட்டிகளில் என்று மொத்தமாக 14 போட்டிகளில் விளையாட உள்ளன.

100 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை, 101ஆவது பந்தில் விக்கெட்: தட்டி தூக்கிய ரஷீத் கான் சாதனை!

ஆரம்பம் - முடிவு:

நாளை மறுநாள் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் திருவிழா வரும் மே 28 ஆம் தேதி வரையில் நடக்கிறது. மே 21 ஆம் தேதி நடக்கும் கடைசி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் குவாலிஃபையர் சுற்றிலும், அடுத்த 2 இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் எலிமினேட்டர் போட்டியிலும் மோதும். இதில், தோல்வியுறும் அணி வெளியேறும், வெற்றி பெற்ற அணி முதல் குவாலிஃபையர் சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் 2ஆவது எலிமினேட்டர் சுற்றில் மோதும். அப்படி வெற்றி பெறும் அணி முதல் குவாலிஃபையர் சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். இந்தப் போட்டி வரும் மே 28 ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்லில் 701 பவுண்டரிகள், 136 சிக்சர்கள் அடித்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஷிகர் தவான்!

10 அணிகள்:

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்
  • குஜராத் டைட்டன்ஸ்
  • பஞ்சாப் கிங்ஸ்
  • டெல்லி கேபிடல்ஸ்
  • லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அணிகளின் ஹோம் மைதானங்கள்:

  1. மும்பை இந்தியன்ஸ் - வான்கடே ஸ்டேடியம்
  2. சென்னை சூப்பர் கிங்ஸ் - எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம்
  3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஈடான் கார்டன்ஸ் மைதானம்
  4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்
  5. ராஜஸ்தான் ராயல்ஸ் - சவாய் மான்சிங் ஸ்டேடியம்
  6. குஜராத் டைட்டன்ஸ் - நரேந்திர மோடி ஸ்டேடியம்
  7. பஞ்சாப் கிங்ஸ் - பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் பிந்த்ரா ஸ்டேடியம்
  8. டெல்லி கேபிடல்ஸ் - அருண் ஜெட்லி ஸ்டேடியம்
  9. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம்
  10. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - எம் சின்னசாமி ஸ்டேடியம்

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!