IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

Published : Mar 28, 2023, 08:32 PM IST
IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்

சுருக்கம்

ஐபிஎல்  16வது சீசனில் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.  

ஐபிஎல்லில் 15 சீசன்கள் முடிந்த நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின்னர் கோப்பையை வெல்லவில்லை. கடந்த சீசனில் ஃபைனலுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது.

IPL 2023: சிஎஸ்கே அணியின் பலங்கள் & பலவீனங்கள்..! ஓர் அலசல்

எனவே இந்த சீசனில் கோப்பையை வென்றே தீரும் உறுதியுடன் சஞ்சு சாம்சன் தலைமையில் களமிறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த சீசனில் களமிறங்கும் ராஜஸ்தான் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 

ஜோஸ் பட்லருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக இறங்குவார். 3ம் வரிசையில் தேவ்தத் படிக்கல்லும், 4ம் வரிசையில் கேப்டன் சஞ்சு சாம்சனும் ஆடுவார்கள். 5ம் வரிசையில் ஷிம்ரான் ஹெட்மயர் பேட்டிங் ஆடுவார். கடந்த சீசனில் ஹெட்மயர் அபாரமாக பேட்டிங் ஆடி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்ததுடன், ஃபினிஷர் ரோலை அருமையாக செய்தார். அதன்பின்னர் ரியான் பராக் பேட்டிங் ஆடுவார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக டிரெண்ட் போல்ட், குல்தீப் சென் ஆகிய இருவருடன் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஆடுவார். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய 2 அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் ஆடுவார்கள்.

IPL 2023: பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார்..! சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sakib Hussain Net Worth: முதல் மேட்ச்லயே 4 விக்கெட்! யார் இந்த சகிப் ஹுசைன்? சொத்து மதிப்பு எவ்வளவு?
Sakib Hussain: 'ஷூ வாங்க காசு இல்ல'னு அழுத மகன்.. நகையை விற்ற தாய்! SRH வீரரின் பகீர் பின்னணி..