டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரராக ஷதாப் கான் வரலாற்று சாதனை

By karthikeyan VFirst Published Mar 28, 2023, 6:40 PM IST
Highlights

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் பவுலர் என்ற சாதனையை ஷதாப் கான் படைத்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரராக திகழ்கிறார் ஆல்ரவுண்டர் ஷதாப் கான். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரராக திகழும் ஷதாப் கான், குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அசத்திவருவதால் டி20 அணிக்கு அவரையே கேப்டனாக நியமிக்கலாம் என்ற வலியுறுத்தல்களும் உள்ளன.

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்கிறார் ஷதாப் கான். ரிஸ்ட் ஸ்பின்னரான ஷதாப் கான், ஸ்பின் ஆல்ரவுண்டராக பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் ஜொலித்துவருகிறார். 

IPL 2023: பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார்..! சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணியை ஷதாப் கான் தான் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். ஆஃப்கானிஸ்தானிடம் முதல் முறையாக சர்வதேச டி20 தொடரில் தோற்று பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை படைத்தது. முதல் 2 போட்டிகளிலும் தோற்றதால் பாகிஸ்தான் அணி தொடரை இழந்தது.

ஆனால் 3வது போட்டியில் அபாரமாக ஆடி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி  ஒயிட்வாஷை தவிர்த்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 182 ரன்களை குவித்தது. ஷதாப் கான் 17 பந்தில் 28 ரன்கள் அடித்தார் கேப்டன் ஷதாப் கான். 183 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியை 116 ரன்களுக்கு சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் அசத்திய ஷதாப் கான், பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் வீழ்த்திய 3 விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் பாகிஸ்தான் பவுலர் என்ற சாதனையை படைத்தார். ஷாஹித் அஃப்ரிடி 98 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரது சாதனையை முறியடித்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார் ஷதாப் கான். 

அந்த பையன் இந்தியாவிற்கு ஆட ரெடி ஆகிட்டான்.. ரோஹித்துக்கும் அது தெரியும்.. உடனே டீம்ல எடுங்க! கங்குலி கருத்து

டிம் சௌதி(134), ஷகிப் அல் ஹசன்(131), ரஷீத் கான்(129), இஷ் சோதி(114), மலிங்கா(107) ஆகிய 5 பேருக்கு அடுத்த 6வது இடத்தை பிடித்தார் ஷதாப் கான்(101). 
 

click me!