IPL 2023: பென் ஸ்டோக்ஸ் பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார்..! சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவு

By karthikeyan V  |  First Published Mar 28, 2023, 6:20 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமையும். 
 


ஐபிஎல் 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல்லில் 4 முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

மேலும் சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் கோப்பையுடன் அவரை வழியனுப்பும் முனைப்பில் தயாராகிவருகிறது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியை வலுப்படுத்தும் விதமாக, இங்கிலாந்து ஆல்ரவுண்டரும் மிகப்பெரிய மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடி என்ற பெரிய தொகை கொடுத்து சிஎஸ்கே அணி வாங்கியது.

Tap to resize

Latest Videos

IPL 2023: புதிய கேப்டனின் கீழ் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வலுவான ஆடும் லெவன்
 
ஸ்டோக்ஸ் ஒரு ஆல்ரவுண்டராக அணியின் பேலன்ஸுக்கு வலுசேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பில் தான் அவருக்கு பெரிய தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் முழங்கால் காயம் காரணமாக அவர் இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே ஆடுவார் என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் பந்துவீசாதது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு. ஆனால் அவரது ஃபிட்னெஸ் இங்கிலாந்து அணிக்கு அவர் ஆடுவதற்கு முக்கியம் என்பதால், அதில் கவனம் செலுத்த வேண்டியது. 

அந்த பையன் இந்தியாவிற்கு ஆட ரெடி ஆகிட்டான்.. ரோஹித்துக்கும் அது தெரியும்.. உடனே டீம்ல எடுங்க! கங்குலி கருத்து

சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பாதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷனா.

click me!