ஆர்சிபி அணியில் அறிமுகமான மாயங்க் டாகர் யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் லெஜெண்ட் சேவாக்கின் மருமகன்!

Published : Mar 25, 2024, 08:18 PM IST
ஆர்சிபி அணியில் அறிமுகமான மாயங்க் டாகர் யார் தெரியுமா? இந்திய அணியின் முன்னாள் லெஜெண்ட் சேவாக்கின் மருமகன்!

சுருக்கம்

ஆர்சிபி அணியில் அறிமுகமான மாயங்க் டாகர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

         இதில், அனுஷ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் மட்டுமே ஒரு டீசண்டான ஸ்கோர் எடுத்துக் கொடுத்தனர். எனினும் பவுலிங்கில் இன்னும் கொஞ்சம் டைட் பண்ணியிருந்தால் ஆர்சிபி ஜெயிச்சிருக்கும் என்று சொல்லும் நிலையில் அந்த போட்டி இருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்தர் சேவாக்கின் அக்கா மகன் மாயங்க் டைகர் அறிமுகமானார். 

வெற்றியோடு க ளமிறங்கும் பஞ்சாப் – கோட்டையில் வாகை சூடுமா பெங்களூரு? டாஸ் ஜெயிச்சு பவுலிங்!  

சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் 2 ஓவர்கள் வீசிய அவர் 6 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இன்று நடக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் அணியில் இடம் பெற்றிருக்கிறார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கில்லாடியான மாயங்க் டாகர் இந்த சீசனில் அறிமுகமாகவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார்.

ஆனால், அந்த சீசனில் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு, 2023 ஆம் ஆண்டு ரூ.1.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த சீசனில் 3 போட்டிகளில் இடம் பெற்று 11 ஓவர்கள் வீசிய மாயங்க் 83 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அதன் பிறகு அதே ரூ.1.80 கோடிக்கு ஆர்சிபி அணி அவரை ஏலம் எடுத்தது.இந்த சீசனில் தற்போது 2ஆவது போட்டியில் விளையாடுகிறார். இன்னும் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. பேட்டிங்கிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சரி, அவரைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம் வாங்க…

ஐபிஎல் 2024 முழு அட்டவணை வெளியீடு – அகமதாபாத்தில் எலிமினேட்டர், சேப்பாக்கத்தில் ஃபைனல் கன்பார்ம்!

டெல்லியைச் சேர்ந்தவர் 24 வயது நிரம்பிய மாயங்க் டாகர். இவரது தந்தை ஜிதேந்தர் டாகர் டெல்லி மாநகராட்சி காண்ட்ராக்டர். மாயங்க் டாகர் தாய், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக்கின் அக்கா. அப்படி என்றால் மாயங்க் டாகர், சேவாக்கின் மருமகன் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அண்டர்19 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். 2016 -17 ஆம் ஆண்டு சீசனில் ஹிமாச்சல் பிரதேசம் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் நடந்தால் ஆர்சிபியின் வெற்றி 100 சதவிகிதம் உறுதி; நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்!

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?