பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 6ஆவது போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் பாப் டூப்ளெசிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
நடப்பு ஆண்டுக்கான 17ஆவது ஐபிஎல் தொடர் கடந்த 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இதுவரையில் நடந்த ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. 22ஆம் தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் 2024 முழு அட்டவணை வெளியீடு – அகமதாபாத்தில் எலிமினேட்டர், சேப்பாக்கத்தில் ஃபைனல் கன்பார்ம்!
இந்தப் போட்டியைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூருவின் கோட்டையான சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
பாப் டூ ப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக், அனுஷ் ராவத் (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசஃப், மாயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்.
சப்ஸ்டிடியூட்:
சுயாஷ் பிரபுதேசாய், மகிபால் லோம்ரார், கரண் சர்மா, விஜயகுமார் வைஷாக், ஸ்வப்னில் சிங்.
பஞ்சாப் கிங்ஸ்:
ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிராப்சிம்ரன் சிங், சாம் கரண், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், ஷசாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், கஜிஸோ ரபாடா, ராகுல் சாகர்.
சப்ஸ்டிடியூட்:
அர்ஷ்தீப் சிங், ரிலீ ரோஸோவ், தனய் தியாகராஜன், ஹர்ப்ரீத் பாட்டீயா, வித்வத் காவேரப்பா.
நேருக்கு நேர்:
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் 31 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணியானது 17 போட்டியிலும், ஆர்சிபி 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மொகாலியில் நடந்த போட்டியில் ஆர்சிபி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இது மட்டும் நடந்தால் ஆர்சிபியின் வெற்றி 100 சதவிகிதம் உறுதி; நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்!
பெங்களூரு சின்னச்சுவாமி மைதானம்:
பெங்களூருவின் கோட்டை என்று சொல்லப்படும் சின்னச்சுவாமி மைதானத்தில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி 6 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்சிபி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்தமாக பெங்களூரு மைதானத்தில் ஆர்சிபி:
ஒட்டுமொத்தமாக பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் இதுவரையில் 84 போட்டிகள் நடந்துள்ளன. இதில், 39 போட்டிகளில் ஆர்சிபி வெற்றியும், 40 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
இரு அணிகளுக்கு இடையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
கிறிஸ் கெயில் (ஆர்சிபி, பிபிகேஸ்) – 17 போட்டிகள் – 873 ரன்கள் – அதிகம் 117
விராட் கோலி (ஆர்சிபி) – 30 போட்டிகள் – 861 ரன்கள் – அதிகம் 113 ரன்கள்
ஏபி டிவிலியர்ஸ் (ஆர்சிபி) – 21 போட்டிகள் -718 ரன்கள் – 89*
இரு அணிகளுக்கு இடையில் அதிக விக்கெட் எடுத்தவர்கள்:
யுஸ்வேந்திர சகால் – 16 இன்னிங்ஸ் – 25 விக்கெட்டுகள் – பெஸ்ட் 4/25
சந்தீப் சிங் (பிபிகேஸ்) – 10 இன்னிங்ஸ் – 16 விக்கெட்டுகள் – பெஸ்ட் 3/15
பியூஷ் சாவ்லா (பிபிகேஸ்) – 12 இன்னிங்ஸ் – 15 விக்கெட்டுகள் – 4/17
ஆர்சிபி விளையாடும் போட்டிகள்:
மார்ச் 22 - சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சேப்பாக்கம் – இரவு 7.30 மணி
மார்ச் 25 – பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களூரு – இரவு 7.30 மணி
மார்ச் 29 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு – இரவு 7.30 மணி
ஏப்ரல் 02 – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு – இரவு 7.30 மணி
ஏப்ரல் 06 – ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ஜெய்ப்பூர் – இரவு 7.30 மணி
ஏப்ரல் 11 – மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை – இரவு 7.30 மணி
ஏப்ரல் 15 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு – இரவு 7.30 மணி
ஏப்ரல் 21 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா – பிற்பகல் 3.30 மணி
ஏப்ரல் 25 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – ஹைதராபாத் – இரவு 7.30 மணி
ஏப்ரல் 28 – குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – அகமதாபாத் – பிற்பகல் 3.30 மணி
மே 04 – குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு – இரவு 7.30 மணி
மே 09 – பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – தரம்சாலா – இரவு 7.30 மணி
மே 12 – டெல்லி கேபிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு – இரவு 7.30 மணி
மே 18 – சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பெங்களூரு – இரவு 7.30 மணி