நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் முழு அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. இதில், இறுதிப் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 173 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா நல்ல தொடக்கம் கொடுக்க ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பெறச் செய்தனர்.
இது மட்டும் நடந்தால் ஆர்சிபியின் வெற்றி 100 சதவிகிதம் உறுதி; நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்தியாவில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையில் 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரில் 21 போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
🚨 NEWS 🚨
BCCI announces the full schedule of 2024 🗓️
The remainder of the schedule has been drawn up, factoring in the polling dates and venues for the upcoming Lok Sabha Elections across the country.
Check out the schedule here 🔽
இந்த நிலையில் தான் எஞ்சிய போட்டிகளுக்கான IPL 2024 Full Schedule முழு அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே 21 போட்டிகளுக்கு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது எஞ்சிய 53 போட்டிகளுக்கான முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வரும் மே 19ஆம் தேதி வரையில் ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன் பிறகு அகமதாபாத் மைதானத்தில் முதல் குவாலிஃபையர் போட்டியும், எலிமினேட்டர் போட்டியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2ஆவது குவாலிஃபையர் போட்டியும், ஐபிஎல் இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
இந்த சீசன் தோனியின் கடைசி சீசன் என்று உறுதியாக சொல்லப்படாவிட்டாலும், தோனிக்கு செண்ட் ஆஃப் கொடுக்கும் நிகழ்வாக இந்த சீசன் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆதலால், தான் இந்த சீசனின் இறுதிப் போட்டியானது சென்னையின் ஹோம் மைதானமான எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.