ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 6ஆவது போட்டி இன்று இரவு பெங்களுரூவில் நடைபெறுகிறது.
நடப்பு ஆண்டுக்கான 17ஆவது ஐபிஎல் தொடர் கடந்த 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இதுவரையில் நடந்த ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. 22ஆம் தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தனது 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவின் கோட்டையான சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது பெங்களூருவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்:
இதற்கு முன்னதாக இரு அணிகளும் நேருக்கு நேர் 31 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணியானது 17 போட்டியிலும், ஆர்சிபி 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மொகாலியில் நடந்த போட்டியில் ஆர்சிபி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
பெங்களூரு சின்னச்சுவாமி மைதானம்:
பெங்களூருவின் கோட்டை என்று சொல்லப்படும் சின்னச்சுவாமி மைதானத்தில் இரு அணிகளும் 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் ஆர்சிபி 6 போட்டியிலும், பஞ்சாப் கிங்ஸ் 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்சிபி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்தமாக பெங்களூரு மைதானத்தில் ஆர்சிபி:
ஒட்டுமொத்தமாக பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் இதுவரையில் 84 போட்டிகள் நடந்துள்ளன. இதில், 39 போட்டிகளில் ஆர்சிபி வெற்றியும், 40 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
இரு அணிகளுக்கு இடையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
கிறிஸ் கெயில் (ஆர்சிபி, பிபிகேஸ்) – 17 போட்டிகள் – 873 ரன்கள் – அதிகம் 117
விராட் கோலி (ஆர்சிபி) – 30 போட்டிகள் – 861 ரன்கள் – அதிகம் 113 ரன்கள்
ஏபி டிவிலியர்ஸ் (ஆர்சிபி) – 21 போட்டிகள் -718 ரன்கள் – 89*
இரு அணிகளுக்கு இடையில் அதிக விக்கெட் எடுத்தவர்கள்:
யுஸ்வேந்திர சகால் – 16 இன்னிங்ஸ் – 25 விக்கெட்டுகள் – பெஸ்ட் 4/25
சந்தீப் சிங் (பிபிகேஸ்) – 10 இன்னிங்ஸ் – 16 விக்கெட்டுகள் – பெஸ்ட் 3/15
பியூஷ் சாவ்லா (பிபிகேஸ்) – 12 இன்னிங்ஸ் – 15 விக்கெட்டுகள் – 4/17