CSK, PBKS, KKR, RR, GT ஆகிய அணிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமே அணிகளின் ஹோம் மைதானங்கள் தான் காரணமாக சொல்லப்படுகிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் ஆகியோரது நடன நிகழ்ச்சியும், ஏ.ஆர்.ரஹ்மான, சோனு நிகம் ஆகியோரது இசை நிகழ்ச்சியும் நடந்தது.
இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் நடந்து முடிந்த 5 போட்டிகளில் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் இன்று சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் 6ஆவது ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே – ஆர்சிபி:
இதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான முதல் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் சென்னையின் ஹோம் மைதானம்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஆர்சிபிக்கு எதிராக செனையில் விளையாடிய எல்லா போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு மட்டும் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் முல்லன்பூர் பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஹோம் மைதானம். இந்த மைதானத்தில் முதல் முறையாக ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கேகேஆர் – எஸ்ஆர்ஹெச்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 3ஆவது போட்டி நடைபெற்றது. இதில், வெற்றியின் விளிம்பு வரை வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசியில் 4 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா கடைசி ஓவரை சிறப்பாக வீசி கேகேஆர் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆர்ஆர் – எல்எஸ்ஜி
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 193 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரை ஆவேஷ் கான் சிறப்பாக வீசி ஆர்ஆர் வெற்றிக்கு வித்திட்டார்.
ஜிடி – எம்.ஐ
அகமதாபாத்தில் நடைபெற்ற 5ஆவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 6 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் உமேஷ் யாதவ் கடைசி ஓவரை சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி ஜிடி வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் முதல் முறையாக கேப்டனான சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் வெற்றி வாகை சூடியது.
இதுவரையில் நடந்த போட்டிகளின் படி இன்று தனது ஹோம் மைதானத்தில் 6ஆவது போட்டியில் விளையாடும் பெங்களூரு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு ஆர்சிபி அணியின் ஹோம் மைதானமான பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.