இந்திய சுற்றுப்பயணத்திற்காக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் 25ஆம் தேதி முதல் மார்ச் 11ஆம் தேதி வரையில் இந்த டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணியானது மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. இதில், இந்திய ஏ அணி பங்கேற்க உள்ளது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் இந்தியா ஏ அணியில் இடம்பிடித்துள்ள 12 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரதோஷ் ரஞ்சன் பால், சாய் சுதர்சன் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கேப்டனாக அபிமன்யூ ஈஸ்வர தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான் துருவ் ஜுரெல், கேஎஸ் பரத், மானவ் சுதர், புல்கித் நரங், நவ்தீப் சைனி, துஷார் தேஷ்பாண்டே, வித்வாத் காவேரப்பா, ஆகாஷ் தீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி போட்டியானது வரும் 12 ஆம் தேதி முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது.
தேர்தல் நடந்தாலும் கவலையில்லை – இந்தியாவில் தான் ஐபிஎல், எந்த மாற்றமும் இல்லை – பிசிசிஐ திட்டவட்டம்!
இந்த நிலையில், தான் இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு பேட்டிங் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் 10 ஆம் தேதி (இன்று) முதல் 18ஆம் தேதி வரையில் முதல் 9 நாட்கள் மட்டுமே அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நொய்டாவில் கிரிக்கெட் விளையாடிய போது இன்ஜினியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு!
அவர் தலைமை பயிற்சியாளர் நீல் கில்லீனுடன் உதவி பயிற்சியாளர்களான ரிச்சர்ட் டாசன் மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார். அதே நேரத்தில் முன்னாள் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் ஒரு வழிகாட்டியாக பயிற்சி குழுவில் ஒரு பகுதியாக இருப்பார். இங்கிலாந்து லயன்ஸ் பேட்டிங் ஆலோசகராக இருக்கும் இயான் பெல் தற்போது பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியுடன் இருக்கிறார். ஆகையால், அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் இணைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் செயல்திறன் இயக்குநர் மோ போபாட் கூறியிருப்பதாவது: இந்தியா ஏ அணிக்கு எதிராக ஒரு அற்புதமான சவாலாக இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் வீரர்களை ஆதரிக்கும் ஒரு வலுவான பயிற்சியாளர் குழுவைக் கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குழு ஆழ்ந்த மற்றும் மாறுபட்ட அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் கொண்டுள்ளது. நீல் கில்லீன் கடந்த ஆண்டு இலங்கையில் லயன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி சிறப்பாக பணியாற்றினார். மீண்டும் தலைமை பயிற்சியாளர் பொறுப்புகளை ஏற்பார்.
"அதேபோல், இயன் பெல் மற்றும் கிரேம் ஸ்வான் ஆகியோர் கடந்த ஆண்டு எங்கள் லயன்ஸ் அணியில் அதிகளவில் நேரத்தைச் செலவிட்டுள்ளனர், மேலும் அவர்களில் பலருக்கு ஏற்கனவே நன்கு தெரிந்த வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் நல்ல இடமாக இருப்பார்கள். அவர்கள் இருவரும் அந்தந்த பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் பாத்திரங்களுக்கு அற்புதமான அனுபவங்களைக் கொண்டு வருகிறார்கள். கார்ல் ஹாப்கின்சன் மற்றும் ரிச்சர்ட் டாசன் ஆகியோர் விரிவான பாதை அனுபவத்தைக் கொண்டுள்ளனர் அவர்களுடன் இங்கிலாந்து மூத்த பயிற்சிக் கண்ணோட்டத்தையும், இந்திய நிலைமைகளின் சமீபத்திய அனுபவத்தையும் கொண்டு வருகிறார்கள்.
“எங்கள் தயாரிப்புக் காலத்தின் ஒரு பகுதிக்கு தினேஷ் கார்த்திக்கை எங்களுடன் வைத்திருப்பது மற்றும் முதல் டெஸ்டில் வழிநடத்துவது அற்புதமானது. சிறுவர்கள் அவருடன் நேரத்தை செலவிடுவதையும், இந்தியாவில் டெஸ்ட் அளவில் வெற்றி பெறுவதற்கு என்ன தேவை என்பதைப் பற்றிய அவரது அனுபவத்திலிருந்து பயனடைவதையும் விரும்புவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று போபட் மேலும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி:
ஜோஷ் போஹானன் (கேப்டன்), கேசி ஆல்ட்ரிட்ஜ், பிரைடன் கார்ஸ், ஜாக் கார்சன், ஜேம்ஸ் கோல்ஸ், மாட் ஃபிஷர், கீட்டன் ஜென்னிங்ஸ், டாம் லாவ்ஸ், அலெக்ஸ் லீஸ், டான் மௌஸ்லி, கால்லம் பார்கின்சன், மாட் பாட்ஸ், ஆலி பிரைஸ், ஜேம்ஸ் ரீ மற்றும் ஆலி ராபின்சன்.
பயிற்சி போட்டி அட்டவணை:
12-13 ஜனவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம் – மைதானம் பி, அகமதாபாத்.
17-20 ஜனவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
24-27 ஜனவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
1-4 பிப்ரவரி: இங்கிலாந்து லயன்ஸ் v இந்தியா ஏ, நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்