4 ரன்னில் சதத்தை தவறவிட்ட பாபா இந்திரஜித் – லைகா கோவை அணிக்கு முதல் ஆப்பு வச்ச திண்டுக்கல் டிராகன்ஸ்!

By Rsiva kumar  |  First Published Jul 21, 2024, 8:26 PM IST

லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் தொடரின் 19ஆவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின்படி லைகா கோவை கிங்ஸ் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. இந்த நிலையில் தான் தனது 5ஆவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது.

நடாஷாவை திருமணம் செய்வதற்கு முன் பாண்டியா யாரையெல்லாம் காதலித்திருக்கிறார் தெரியுமா?

Latest Videos

undefined

இந்தப் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணியானது கேப்டன் ஷாருக் கானின் அதிரடியால் 172 ரன்கள் குவித்தது. இதில் ஷாருக் கான் 25 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 51 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் 173 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரர்கள் விமல் குமார் 13 ரன்னிலும், ஷிவம் சிங் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

மரண காட்டு காட்டிய ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் - இந்தியா மகளிர் அணி 201 ரன்கள் குவிப்பு!

பூபதி குமார் 0 ரன்னிலும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் பாபா இந்திரஜித் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட உள்பட 96 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆனால், இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் மூலமாக லைகா கோவை கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. எனினும் லைகா கோவை அணியானது 5 போட்டிகளில் 4 வெற்றி ஒரு தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியோடு புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.

லைகா கோவையை துவம்சம் பண்ணிய ஷாருக் கான் - திண்டுக்கல் டிராகன்ஸ் 172 ரன்கள் குவிப்பு!

click me!