நடாஷாவை திருமணம் செய்வதற்கு முன் பாண்டியா யாரையெல்லாம் காதலித்திருக்கிறார் தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jul 21, 2024, 7:20 PM IST

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலா, எல்லி அவ்ராம் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் இருந்துள்ளார்.


நான்கு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இருவரும் பரஸ்பரமாக பிரிந்து சென்றனர். நடாஷா தனது மகன் அகஸ்தியா உடன் சொந்த நாடான செர்பியாவிற்கு சென்றுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு பாண்டியா மற்றும் நடாஷா காதல் திருமணம் செய்தனர். இதையடுத்து இவர்களுக்கு அகஸ்தியா பிறந்தான்.

ஐக்கிய அரபு நாடுகளை வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி – புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம்!

Tap to resize

Latest Videos

undefined

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று மீண்டும் 2ஆவது முறையாக இருவரும் திருமணம் செய்தனர். இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்டியா உடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் நீக்கினார். மேலும், தனது பெயருக்கு பின் இருந்த ஹர்திக் பாண்டியாவின் பெயரை நீக்கினார்.

லைகா கோவையை துவம்சம் பண்ணிய ஷாருக் கான் - திண்டுக்கல் டிராகன்ஸ் 172 ரன்கள் குவிப்பு!

இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடாஷாவை பிரிந்தது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், பிரிவுக்கான காரணம் குறித்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால், இதற்கு பாண்டியாவின் முன்னாள் காதலிகள் தான் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

மரண காட்டு காட்டிய ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் - இந்தியா மகளிர் அணி 201 ரன்கள் குவிப்பு!

பாண்டியா திருமணத்திற்கு முன்னதாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலாவுடன் டேட்டிங் செய்ததாக செய்தி வெளியாகி வருகிறது. அதே போன்று எல்லி அவ்ரமுடனும் உறவில் இருந்துள்ளார். இதே போன்று தான் நடாஷாவை திருமணம் செய்வதற்கு முன்னதாக, அவருடன் லிவிங் டூகெதரில் இருந்துள்ளார். 

click me!