6 பவுண்டரி, 10 சிக்ஸ், ஷிவம் சிங் அடிச்ச அடில திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி – புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!

By Rsiva kumar  |  First Published Jul 26, 2024, 11:52 PM IST

மதுரை அணிக்கு எதிரான டிஎன்பிஎல் 2024 தொடரின் 24 ஆவது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் எனப்படும் டிஎன்பிஎல் 2024 தொடரின் 24ஆவது போட்டி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் ஷிவம் சிங்கின் அதிரடியால் 201 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஷிவம் சிங் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 10 சிக்ஸர் உள்பட 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தான் மகளிர் அணியை பந்தாடிய இலங்கை மகளிர் அணி – 6ஆவது முறையாக ஃபைனலில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!

Latest Videos

undefined

பின்னர் 202 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர் சுரேஷ் லோகேஷ்வர் 55 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். ஜெகதீசன் கௌசிக் 28 ரன்கள் எடுக்கவே, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக சீகம் மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக திண்டுக்கல் டிராகன்ஸ் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. லைகா கோவை கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடமும் பிடித்துள்ளன.

Womens Asia Cup 2024: இலங்கைக்கு எதிரான 140 ரன்கள் குவித்த பாகிஸ்தான் – இறுதிப் போட்டி யாருக்கு?

திண்டுக்கல் டிராகன்ஸ் 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவ்து இடம் பிடித்துள்ளது. 4 மற்றும் 5ஆவது இடங்களில் முறையே திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன் பிரான்ஸின் ரயில் நெட்வொர்க் மீது தாக்குதல் – ரயில் சேவை பாதிப்பு!

click me!