தர்மசாலாவில் புதிதாக அமைக்கப்பட்ட அவுட்பீல்டில் 5 முக்கியமான உலகக் கோப்பை போட்டிகளை நடத்த இந்த மைதானம் தயாராக உள்ளது என்று இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா நடத்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரையில் உலகக் கோப்பை தொடர் நடக்கிறது. ஹைதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
2ஆவது டெஸ்டின் நல்ல ஆரம்பம்; பளூதூக்கிய பேர்ஸ்டோவ்; அஸ்வின் கிண்டல் டுவீட்!
இந்த நிலையில் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிதாக அமைக்கப்பட்ட அவுட்பீல்டில் 5 முக்கியமான உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தயாராக உள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் அதன் நம்பமுடியாத பயணத்தின் மற்றொரு மைல்கல் மற்றும் கடந்த காலத்தில் இருந்த நமது முன்னாள் தலைவர்கள் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் அருண் துமால் ஆகியோரின் தொலைநோக்கு பார்வை மற்றும் கடின உழைப்பால் இது சாத்தியமானது. அவர்கள் மாநிலத்தில் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் உள்கட்டமைப்பின் மேம்பாட்டிற்காக 20 ஆண்டுகள் அயராது உழைத்துள்ளனர்.
மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரரை அலேக்காக தூக்கி சென்ற பேர்ஸ்டோவ்; வைரலாகும் வீடியோ!
இந்த தர்மசாலா மைதானம் நாட்டிலேயே சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த அழகிய இடத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்ற அனைவராலும் பாராட்டப்பட்டது. இது ஜென்டில்மேன் விளையாட்டுக்கான சிறந்த மைதானமாகவும் கருதப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கான இந்த மதிப்புமிக்க வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய பிசிசிஐ மற்றும் ஐசிசிக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்த மைதானத்தை தேர்வு செய்த பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
நாங்கள் தொடர்ந்து உழைத்து வருகிறோம், கடந்த ஆண்டில் மைதானம் மற்றும் அமைப்புகளை மேம்படுத்தி உலகின் சிறந்த அவுட்ஃபீல்டுகளில் ஒன்றாக மாற்றியுள்ளோம். கடந்த மாதம் நடைபெற்ற மிக வெற்றிகரமான ஐபிஎல் ஆட்டங்களில் இந்த மைதானம் சிறந்த ஒன்றாக காணப்பட்டது.
அகமதாபாத்தில் உலகக் கோப்பை தொடர்: 5 ஸ்டார் ஹோட்டல்களில் ஒரு நைட்டுக்கு வாடகை மட்டும் ரூ.50 ஆயிரமாம்!
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 போட்டிகளை நடத்த தர்மசாலா மைதானம் தயாராக இருப்பதாக இமாலச்சல் பிரதேச கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு pic.twitter.com/m9nsuNwC6Z
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இந்த தரம்சாலா மைதானத்தில் SIS Air ஒரு அதிநவீன காற்றை வெளியேற்றும் அமைப்பை அமைத்துள்ளோம், அதில் பிரமிக்க வைக்கும் குளிர் கால ரைகிராஸ் மற்றும் நிழலைத் தாங்கும் நுண்ணிய இலை பாஸ்பலம் புல் ஆகியவற்றின் கலவையாகும். நல்ல வடிகால் வசதியுடன், வானிலைக்கு ஏற்ப புல் வகையின் அவசியத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ற வசதிகளுடன் இந்த மைதானம் மாற்றப்பட்டுள்ளது. தவுலதார் மலைகளின் பின்னணியில் பிரமிக்க வைக்கும் அழகுடன் கூடிய மேம்பட்ட கிரிக்கெட் மைதானமாக இந்த தர்மசாலா மைதானம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மகத்தான வாய்ப்பில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 8 டெஸ்ட் விளையாடும் நாடுகள் பங்கேற்கும் இந்த 5 முக்கியமான போட்டிகளை முதன் முறையாக 50 ஓவர் வடிவத்தில் நடத்த தயாராக உள்ளோம். இது கிரிக்கெட்டின் மிகப்பெரிய அரங்கம் (ஒரு நாள் போட்டிகள்) என்று இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அவ்னிஷ் பர்மர் கூறியுள்ளார்.
மேலும், உலகக் கோப்பையின் போது 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தர்மஷாலாவில் மறக்க முடியாத நல்ல நேரத்தைக் கொண்டிருப்பார்கள் என்று நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.