அஜிங்கியா ரஹானேவின் புத்திசாலித்தனம், தோனியின் கேப்டன்ஷிப்; போராடி தோற்ற டெல்லி; கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்!

By Rsiva kumar  |  First Published May 10, 2023, 11:31 PM IST

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 


சென்னையின் கோட்டை என்று சொல்லப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 55ஆவது போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷிவம் துபே மட்டும் அதிரடியாக ஆடி 25 ரன்கள் அடித்துக் கொடுத்தார். அம்பத்தி ராயுடு 23 ரன்களில் வெளியேறினார். கடைசியாக வந்த தோனி 19ஆவது ஓவரில் அடித்த 20 ரன்கள் மூலமாக சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

அப்பா சிக்ஸர்கள் அடிப்பதைப் பார்த்து ரசித்த மகள் ஷிவா!

Latest Videos

பின்னர் எளிய இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்க வீரரும், கேப்டனுமான டேவிட் வார்னர் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 5 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அவரை அஜிங்கியா ரஹானே ஓடி வந்து கச்சிதமாக ரன் அவுட் செய்தார். தூக்கி எறிந்தால் எங்கு தவறிவிடுமோ என்று தனது புத்திசாலித்தனம் மூலமாக ரன் அவுட் செய்தார். 

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பில் 10 அணிகள்!

பிறகு மணீஷ் பாண்டே 27 ரன்களிலும், ரிலே ரோஸோவ் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து யாரும் இல்லாத நிலையில் சென்னையின் பக்கம் வெற்றி சென்றது. எனினும், ரிப்பல் படேல்  10 ரன்னிலும், அக்‌ஷர் படேல் 21 ரன்னிலும் வெளியேறினர். கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஷிவம் துபே, தோனியின் அதிரடி சிக்ஸர்கள்: டீசண்டான ஸ்கோர் எடுத்த சிஎஸ்கே!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தோல்விக்கு தோனி அடித்த 20 ரன்களே முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. கடைசியாக சென்னை அணியின் பந்து வீச்சைப் பொறுத்த வரையில், மதீஷ் பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடே ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றி 14 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் நீடிக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி 11ல் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் மாதிரி விளையாடும் சிஎஸ்கே; வர்றாங்க, போறாங்க; ஒரு சிக்ஸர் கூட இல்ல!

 

The biggest supporters of MS Dhoni are happy.

CSK roaring in IPL 2023. pic.twitter.com/aYJwCqiRJB

— Johns. (@CricCrazyJohns)

 

click me!