அடுத்தடுத்த சதங்கள்.. அலறவிடும் புஜாரா..! 5 சிக்ஸர்களுடன் காட்டடி சதம்.. வீடியோ

By karthikeyan VFirst Published Aug 14, 2022, 10:22 PM IST
Highlights

இங்கிலாந்தில் நடந்துவரும் உள்நாட்டு ஒருநாள் தொடரான ராயல் லண்டன் ஒருநாள் கோப்ப தொடரில் அடுத்தடுத்து 2 அதிரடி சதங்களை அடித்து அசத்தியுள்ளார் புஜாரா.
 

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா. இந்தியாவிற்காக 96 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6792 ரன்களை குவித்துள்ளார் புஜாரா.

இந்திய டெஸ்ட் அணியில் ராகுல் டிராவிட் என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. இந்தியா மட்டுமல்லாது, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து என உலகம் முழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் தூணாக நின்று இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக திகழ்ந்தவர் புஜாரா.

இதையும் படிங்க - அவரை அசால்ட்டா நெனச்சுராதீங்க! இந்திய வீரரை காட்டி பாகிஸ்தான் அணியை பகிரங்கமாக எச்சரிக்கும் முன்னாள் வீரர்

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தாலும், இந்தியாவிற்காக வெறும் 4 ஒருநாள்  போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார் புஜாரா. 

பொதுவாகவே மிகவும் மெதுவாக ஆடக்கூடியவர் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக ஆடுவதால் அவரது இயல்பான பேட்டிங் ஸ்டைலே தடுப்பாட்டம் தான். அதுமட்டுமல்லாது இயல்பாகவே அவர் மிகவும் மெதுவாக ஆடக்கூடியவர். அதனாலேயே அவர் இந்திய அணிக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிதாக ஆடவேயில்லை.  அதனால் ஐபிஎல்லிலும் அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக ஆடாததால் இந்திய டெஸ்ட் அணியிலும் இடத்தை இழந்த புஜாரா, இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி சதங்களை குவித்து, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். 

இந்நிலையில், இங்கிலாந்தில் இப்போது நடந்துவரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான ராயல் லண்டன் ஒண்டே கோப்பை தொடரில் சசெக்ஸ் அணிக்காக ஆடிவரும் புஜாரா, அடுத்தடுத்து 2 சதங்களை விளாசியுள்ளார். 

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை எடுத்தது ஆச்சரியம் தான்..! ஆகாஷ் சோப்ரா கருத்து

இன்று சசெக்ஸ் மற்றும் சர்ரே அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சசெக்ஸ் அணியில் புஜாரா மற்றும் டாம் க்ளார்க் சதமடித்தனர். டாம் 106 பந்தில் 104 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால் அதிரடியாக அடித்து ஆடி சதமடித்த புஜாரா, 131 பந்தில் 20 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 174 ரன்களை குவித்தார். இது புஜாரா தானா என்று பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அதிரடியான இன்னிங்ஸை ஆடி சதமடித்தார் புஜாரா.

Back to back centuries for . 💯 🤩 pic.twitter.com/9F7bMlvvkF

— Sussex Cricket (@SussexCCC)

புஜாராவின் சதத்தால் 50 ஓவரில் 378 ரன்களை குவித்த சசெக்ஸ் அணி, சர்ரே அணியை 162 ரன்களுக்கு சுருட்டி 216 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சசெக்ஸ் அணி.
 

click me!