ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடி வீரர் அறிமுகம்..? வலுவான அணி காம்பினேஷன்

By karthikeyan VFirst Published Aug 14, 2022, 8:59 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ராகுல் திரிபாதி அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. 

ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 24ம் தேதியே இந்திய அணி செல்கிறது. எனவே ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் சீனியர் மற்றும் முன்னணி வீரர்கள் கொண்ட அணி ஆடுவதால், ஜிம்பாப்வே தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட அணி ஆடுகிறது.

இதையும் படிங்க - 2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை திருப்பிய தோனியின் வியூகம்!ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்

வரும் 18ம் தேதி நடக்கும் முதல் ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியில் ராகுலும் தவானும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். இஷான் கிஷன் 3ம் வரிசையில் இறங்க வாய்ப்புள்ளது. ராகுல், தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவதால், கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

இந்த போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுல் திரிபாதி அறிமுகமாக வாய்ப்புள்ளது. உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் ராகுல் திரிபாதிக்கு ஒருநாள் அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ம் வரிசையில் சஞ்சு சாம்சன் மற்றும் 6ம் வரிசையில் தீபக் ஹூடா இறங்கலாம். ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் ஆடலாம்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அந்த சீனியர் வீரரை எடுத்தது ஆச்சரியம் தான்..! ஆகாஷ் சோப்ரா கருத்து

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான வலுவான இந்திய அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
 

click me!