2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை திருப்பிய தோனியின் வியூகம்!ஹர்பஜன் சிங் பகிர்ந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Aug 14, 2022, 7:18 PM IST
Highlights

2011 ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனியின் ஆலோசனை எப்படி ஆட்டத்தையே தலைகீழாக திருப்பியது என்று ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானும் முன்னாள் கேப்டனுமான தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த கேப்டன்களில் ஒருவர். இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை(2011), டி20 உலக கோப்பை (2007) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தோனி.

மிகச்சிறந்த கேப்டனான தோனி, அவரது தடாலடியான, வித்தியாசமான முடிவுகளுக்கு பெயர்போனவர். தனது உள்ளுணர்வின்படி சில வித்தியாசமான, தனித்துவமான முடிவுகளை எடுத்து, அதன்மூலம் பலன்களையும் அனுபவித்து வெற்றிகளை பறித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் தோனி.

இதையும் படிங்க - ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சீனியர் வீரர் புறக்கணிப்பு..! ரிக்கி பாண்டிங் சொல்லும் நியாயமான காரணம்

2007 டி20 உலக கோப்பை ஃபைனலில் கடைசி ஓவரை ஜொஹிந்தர் ஷர்மாவிடம் கொடுத்தது, 2011 ஒருநாள் உலக கோப்பை ஃபைனலில் இக்கட்டான நிலையில் ஃபார்மில் இருந்த யுவராஜ் சிங்கை களமிறக்கிவிடாமல் அவரது பேட்டிங் ஆர்டரில் தானே இறங்கியது என அவர் எடுத்த அதிரடி முடிவுகள் அனைத்துமே இந்திய அணிக்கு பாசிட்டிவான முடிவுகளை வழங்கியது. 

மேலும் ஆட்டத்தின் போக்கு, வீரர்கள் ஆடும் விதம் ஆகியவற்றின் அடிப்படையில், தோனி தனது வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார். அவைகளும் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பியிருக்கின்றன.

அந்தவகையில், 2011 ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி கூறிய ஆலோசனை ஆட்டத்தை எப்படி திருப்பியது என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அந்த அரையிறுதி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் அடிக்க, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 260 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டுமல்ல; ஆசிய கோப்பையையும் இந்த அணி தான் வெல்லும்.! ரிக்கி பாண்டிங் அதிரடி

261 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 106 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 5வது விக்கெட்டுக்கு கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் உமர் அக்மலும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியது. அடித்து ஆடிய உமர் அக்மல் 24 பந்தில் 29 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். உமர் அக்மலை வீழ்த்தி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தது ஹர்பஜன் சிங். அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்ததால் தான் இந்திய அணி, பாகிஸ்தானை 231 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற முடிந்தது.

இந்நிலையில், உமர் அக்மலின் விக்கெட்டை தான் வீழ்த்தியது தோனியின் ஆலோசனைப்படித்தான் என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியில் நான் 5 ஓவர்கள் வீசி 26-27 ரன்களை வழங்கியிருந்தேன். வாட்டர் பிரேக் எடுத்துவிட்ட வந்த என்னிடம் தோனி வந்து, பாஜூ பா (ஹர்பஜன் சிங்), அரௌண்ட் தி விக்கெட்டில் பந்துவீசு என்றார். அந்த நேரத்தில் மிஸ்பாவும் உமர் அக்மலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர். அந்த பார்ட்னர்ஷிப் அபாயகரமாக இருந்தது. 

இதையும் படிங்க - ஷிகர் தவான் எவ்வளவு பெரிய பிளேயர்.. அவரை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே! இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்

எனவே சாமியிடம் வேண்டிக்கொண்டே பந்துவீச வந்தேன். இந்தியா ஜெயிக்க வேண்டும் என்ற எனது வேண்டுதல் கடவுளுக்கு கேட்டுவிட்டது என்று நினைக்கிறேன். நான் தோனி கூறியது போல் அரௌண்ட் தி விக்கெட்டில் வந்து வீசிய முதல் பந்திலேயே உமர் அக்மல் அவுட்டானார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!