பிசிசிஐயின் எதிரியுடன் கூட்டணி சேரும் ஸ்ரீனிவாசன் – சிஎஸ்கேக்கு தடையா?

By Rsiva kumar  |  First Published Feb 14, 2024, 12:55 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி சீனிவாசன், பிசிசிஐயின் எதிரியான லலித் மோடியுடன் கூட்டணி சேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிசிசிஐயின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. தற்போது வரையில் 16 சீசன்கள் நடந்த நிலையில், வரும் மார்ச் மாதம் 17ஆவது சீசன் நடத்தப்பட இருக்கிறது. இதுவரையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.

Child Cricket Video: புரஃபஷனல் கிரிக்கெட்டர் போன்று கிரிக்கெட் விளையாடிய சுட்டிக் குழந்தையின் வீடியோ வைரல்!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியான ஸ்ரீநிவாசன், பிசிசிஐயின் பரம எதிரியான லலித் மோடியுடன் கைகோர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சூதாட்ட புகாரில் சிக்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

CSK Brand Ambassador: சிஎஸ்கேயின் பிராண்ட் அம்பாசிடராக கத்ரினா கைஃப் ஒப்பந்தம்!

பிசிசிஐ பொறுத்த வரையில் யாரும் தங்களுக்கு எதிரான செயல்படக் கூடாது. அதையும் மீறி அவர்கள் செயல்பட்டால் அவர்களுக்கு வாழ்நாள் தடை தான் விதிக்கப்படும். அப்படித்தான் இந்திய அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் ஐசிஎல் என்ற கிரிக்கெட் தொடரை தொடங்கினார். இந்த தொடரில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஐபிஎல் என்ற கிரிக்கெட் தொடரை தொடங்கி லலித் மோடி பிசிசிஐக்கு அதிக லாபம் கொடுத்தார்.

AUS vs WI: 183 ரன்னுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா – கடைசியாக ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்பும் வெஸ்ட் இண்டீஸ்!

பிசிசிஐ விட தாம் தான் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்று லலித் மோடி மறைமுகமாக பல வேலைகளை செய்தார். இதையடுத்து அவர் பண மோசடி, சூதாட்ட புகாரில் சிக்கி தவித்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இனிமேல் அவர் பிசிசிஐக்கு திரும்ப முடியாமல் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் லலித் மோடி புதிதாக ஐபிஎல் தொடருக்கு போட்டியாக தனியார் தொடரை நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறார்.

The Hundred என்ற தொடரை ஐபிஎல் தொடருக்கு போட்டிக்கு மாற்றும் முயற்சியில் லலித மோடி இறங்கியிருகிறார். மேலும், ஐபிஎல் தொடரிலுள்ள அணிகளை வர வைத்து இங்கிலாந்தில் உள்ள அணிகளை வாங்கி புதிதாக ஐபிஎல் தொடருக்கு போட்டியாக தொடரை நடத்த திட்டமிட்டுள்ளார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியான ஸ்ரீநிவாசன் லலித் மோடியுடன் கை கோர்த்த சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IND vs ENG:3ஆவது டெஸ்டிலிருந்து கேஎல் ராகுல் விலகல் – அவருக்குப் பதில் அணியில் இடம் பெற்ற வீரர் யார் தெரியுமா?

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை விதிக்கப்படுமோ என்ற அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் எஸ் ஏ20 லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதே போன்று இங்கிலாந்திலும் நடத்தப்பட இருப்பது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், பிசிசிஐக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

click me!