
சர்வதேச கிரிக்கெட் கவுன்சின் எனப்படும் ஐசிசி மகளிருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த ஒருநாள் அணியாக இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. பேட்டிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்தின் நடாலி ஸ்கிவர் பிராண்ட் 807 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
CSK Brand Ambassador: சிஎஸ்கேயின் பிராண்ட் அம்பாசிடராக கத்ரினா கைஃப் ஒப்பந்தம்!
இலங்கை வீராங்கனை சாமரி அட்டப்பட்டு 736 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 717 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறார். இந்த நிலையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2 இடங்கள் முன்னேறி 696 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான ஹர்மன் ப்ரீத் கவுர் 639 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் நீடிக்கிறார். இதே போன்று ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 746 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் சரிந்து 654 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.