சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது. இதையடுத்து, 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கிறது.
இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய ஏர்லைன் நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாப்பூர்வ ஸ்பான்சராக இணைந்துள்ளது.
இதனை அறிவிக்கும் விதமான நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில், எதிஹாட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள், சிஎஸ்கே அணி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். அதில், தோனியின் ஜெர்சி நம்பர் 7 கொண்ட சிஎஸ்கே ஜெர்சி வெளியிடப்பட்டது. அதில், ஜெர்சியின் பின்பக்கத்தில் எதிஹாட் ஏர்வேஸ் என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே வீரர்கள் இது போன்ற ஜெர்சி அணிந்து தான் விளையாடுவார்கள்.
AUS vs WI 3rd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய ரூதர்போர்டு, ரஸல் – வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவிப்பு!
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப் இருந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாப்பூர்வ ஸ்பான்சராக எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த கத்ரீனா கைஃப் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசிடராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.