இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து கேஎல் ராகுல் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில், இந்தியா மற்றும் இங்கிலாந்து தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. 3ஆவது போட்டி வரும் 15 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில், 2ஆவது போட்டியில் காயம் காரணமாக இடம் பெறாமலிருந்த கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் உடல் தகுதியை பொறுத்து இடம் பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
AUS vs WI 3rd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய ரூதர்போர்டு, ரஸல் – வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவிப்பு!
இந்த நிலையில், தான் கேஎல் ராகுல் உடல் தகு தி பெறாத நிலையில், அவர் 3ஆவது போட்டியிலிருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது வரையில் ராகுல் 90 சதவிகிதம் உடல் தகுதியை எட்டியுள்ளார். என்னும், அவரை தொடர்ந்து பிசிசிஐ மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. அவர் உடல் தகுதி எட்டிய பிறகு எஞ்சிய போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். மேலும், அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்ப்ரித் பும்ரா (துணை கேப்டன்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ்ல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல்.