AUS vs WI 3rd T20I: ருத்ரதாண்டவம் ஆடிய ரூதர்போர்டு, ரஸல் – வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவிப்பு!

By Rsiva kumar  |  First Published Feb 13, 2024, 4:09 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதையடுத்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 0-3 என்று இழந்தது. கடைசியாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த 2 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இந்த நிலையில் தான் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது டி0 போட்டி தற்போது பெர்த்தில் நடந்து வருகிறது.

வயதான டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் தத்தாஜிராவ் கெய்க்வாட் 95 வயதில் காலமானார்!

Tap to resize

Latest Videos

இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜான்சன் சார்லஸ் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பிறகு வந்த ரோஸ்டன் சேஸ் 37 ரன்னிலும், ரோவ்மன் பவல் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து ஆண்ட்ரே ரஸல் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உள்பட 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Ravindra Jadeja: ஜடேஜா வந்தால் அக்‌ஷர், குல்தீப் யாதவ்விற்கு சிக்கல் – இந்திய அணியின் தேர்வு யாராக இருக்கும்?

இதே போன்று ஷெர்பேன் ரூதர்போர்டு 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்தி ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

1078 அணிகளுக்கு இடையிலான லோக்சபா பிரீமியர் லீக்கை தொடங்கி வைத்த அமித் ஷா – ஹர்திக் பாண்டியா பங்கேற்பு!

click me!