சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் பலப்பரீட்சை: யாருக்கு சாதகம்?

By Rsiva kumar  |  First Published Mar 26, 2024, 11:40 AM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 7ஆவது ஐபிஎல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.


ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சிஎஸ்ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

வீடியோ காலில் மனைவி, மகனுடன் கொஞ்சி விளையாடிய விராட் கோலி – வீடியோ வைரல்!

Tap to resize

Latest Videos

இவரது தலைமையில் சிஎஸ்கே அணியானது முதல் போட்டியில் ஆர்சிபியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியைத் தொடர்ந்து சிஎஸ்கே மற்றும் ஜிடி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கு முன்னதாக, இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 5 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் 3 போட்டியிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஆண்டு அகமதாபாத் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

Virat Kohli Orange Cap: முதல் முறையாக இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் வென்ற கோலி!

இதுவரையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த 65 போட்டிகளில் சிஎஸ்கே 46 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தின் சிஎஸ்கே அடித்த அதிகபட்ச ஸ்கோர் 246/5 vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2010). குறைந்தபட்ச ஸ்கோர் 109 vs மும்பை இந்தியன்ஸ் (2019).

சிஎஸ்கே – ஜிடி போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட் – 5 இன்னிங்ஸ் – 304 ரன்கள் – அதிகபட்சம் 92 ரன்கள்

விருத்திமான் சகா – 5 இன்னிங்ஸ் – 169 ரன்கள் – அதிகபட்சம் 67* ரன்கள்

சுப்மன் கில் – 5 இன்னிங்ஸ் – 162 ரன்கள் – அதிகபட்சம் 63 ரன்கள்

ஹோலி டிரீட் கொடுத்த கோலி, சிறந்த பினிஷரான தினேஷ் கார்த்திக் – பெங்களூருவில் கோட்டை கட்டிய ஆர்சிபி!

சிஎஸ்கே – ஜிடி போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்:

முகமது ஷமி – 5 இன்னிங்ஸ் – 7 விக்கெட்டுகள் – பெஸ்ட் 2/19

மதீஷா பதிரனா – 3 இன்னிங்ஸ் – 6 விக்கெட்டுகள் – 2/24

அல்ஜாரி ஜோசஃப் (ஜிடி) – 3 இன்னிங்ஸ் – 5 விக்கெட்டுகள் – 2/33

Virat Kohli 100 Half Centuries:டி20 கிரிக்கெட்டில் 100 முறை 50 அடித்து சரித்திரம் படைத்த சரித்திர நாயகன் கோலி!

click me!