பஞ்சாப் அணிக்கு எதிராக 77 ரன்கள் குவித்ததன் மூலமாக 2 போட்டிகளில் விளையாடி 98 ரன்கள் எடுத்து அதிக ரன்களுக்காக ஆரஞ்சு கேப் வென்றுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 6அவது போட்டி பெங்களூரு எம் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்துக் கொடுக்க பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் 177 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட ஆர்சிபி அணியில் பாப் டூப் ளெசிஸ் 3, கேமரூன் க்ரீன்3, கிளென் மேக்ஸ்வெல் 3, ரஜத் படிதார் 18, அனுஜ் ராவத் 11 ரன்கள் என்று வரிசையாக நடையை கட்டினர்.
ஹோலி டிரீட் கொடுத்த கோலி, சிறந்த பினிஷரான தினேஷ் கார்த்திக் – பெங்களூருவில் கோட்டை கட்டிய ஆர்சிபி!
இந்தப் போட்டியில் தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய கோலி 31 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சரித்திரம் படைத்தார். உள்ளூர் போட்டி, இந்திய அணி டி20 மற்றும் ஐபிஎல் என்று மொத்தமாக டி20 வரலாற்றில் 100 அரைசதங்கள் அடித்த 3ஆவது வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், 100 முறை அரைசதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நிகழ்த்தியிருக்கிறார். இதற்கு முன்னதாக டேவிட் வார்னர் (109) மற்றும் கிறிஸ் கெயில் (110) ஆகியோர் அதிக அரைசதங்கள் அடித்து முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 49 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார். இதன் மூலமாக 2 போட்டிகளில் விளையாடி 98 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற முறையில் ஆரஞ்சு கேப் பெற்றுள்ளார். இது தொடர் முழுவதும் மாறிக் கொண்டே இருக்கும். அடுத்த முறை அதிக ரன்கள் எடுக்கும் வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும்.
Virat Kohli, IPL 2024: கேட்ச் விட்டதால் வந்த வினை, ஒரே ஓவரில் 4, 4, 4, 0, 4 வெளுத்து கட்டிய கோலி!
கடைசியில் தினேஷ் கார்த்திக் வந்து அடித்துக் கொடுக்க, ஆர்சிபி 19.2 ஓவரில 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 10 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 28* ரன்கள் எடுத்தார். லோம்ரோர் 17 ரன்கள் எடுத்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் டெத் ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 372 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த போட்டியில் கூட தினேஷ் கார்த்திக் தான்38 ரன்கள் எடுத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த ஆர்சிபி போட்டி உள்பட இதுவரையில் நடந்த 6 போட்டிகளிலும் ஹோம் மைதானங்களில் ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. நாளை நடக்கும் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போடியானது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்தப் போட்டியிலும் சென்னை ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.