2026ஆம் ஆண்டுக்கான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை யார் நடத்துறாங்க தெரியுமா?

By Rsiva kumarFirst Published Dec 24, 2022, 2:11 PM IST
Highlights

வரும் 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

கத்தார் நாட்டில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கிய ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி முடிந்தது. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகளும் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றன. கடந்த 18 ஆம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில், பெனால்ட்டி ஷூட் முறையில் அர்ஜெண்டினா அணி 3 ஆவது முறையாக உலகக் கோப்பையைத் தட்டிச் சென்றது. கால்பந்து போட்டிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போதுதான் இந்த தாக்கம் குறைந்து வரும் நிலையில், அடுத்து 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை எங்கு நடக்கிறது? யார் நடந்த்துகிறார்கள் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IPL Mini Auction 2023: ஐபிஎல் அணியில் இடம் பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா?

அதன்படி வரும் 2026 ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரை மெக்ஸிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா நடத்தியது. கடந்த 1970 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மெக்ஸிகோ நடத்தியது. முதல் முறையாக கனடா உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துகிறது. அதுமின்றி முதல் முறையாக 3 நாடுகள் உலகக் கோப்பையை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத பெரிய வீரர்கள்

இதற்கு முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரை ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் இணைந்து நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பையில் மட்டும் மொத்தம் 48 நாட்கள் பங்கேற்கின்றன. மிகவும் வித்தியாசமாகவும், மாறுபட்ட வகையில் இருப்பது போன்றும் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2023 Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலைபோன டாப் 10 வீரர்கள்

மூன்று அணிகளும் 16 நாடுகளை அறிவித்துள்ளன. அதில், 11 நாடுகள் அமெரிக்காவில் உள்ள. சியாட்டில், சான் பிரான்சிஸ்கோ (வளைகுடா பகுதி), பிலடெல்பியா, நியூயார்க், மியாமி, லாஸ் ஏஞ்செல்ஸ், கன்சாஸ் சிட்டி சிட்டி, ஹூஸ்டன், டல்லாஸ், பாஸ்டன், அட்லாண்டா ஆகிய நாடுகளில் நடக்கிறது. 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிந்த பிறகு தான் 2030 ஆம் ஆண்டில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!