பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன்..! காரணத்துடன் கறாரா கூறிய ஆஸி., முன்னாள் வீரர்

By karthikeyan V  |  First Published Dec 20, 2022, 6:27 PM IST

ரிக்கி பாண்டிங்கை விட தோனி தான் சிறந்த கேப்டன் என்று பாண்டிங் கேப்டன்சியில் ஆஸ்திரேலிய அணியில் ஆடிய பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். அதற்கான தெளிவான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
 


சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி ஆகிய இருவருமே சிறந்த கேப்டன்கள். பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்கும், தோனி இந்திய அணிக்கும் கேப்டனாகவும் வீரராகவும் பல அபார வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர். 

ரிக்கி பாண்டிங்கின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அந்த காலக்கட்டத்தில் வீழ்த்தவே முடியாத வெற்றிகரமான அணியாக கெத்தாக வலம்வந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு முறை தொடர்ச்சியாக உலக கோப்பையை வென்று கொடுத்தவர் பாண்டிங். அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக திகழ்ந்தது. 

Tap to resize

Latest Videos

மெஸ்ஸி மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால்.... வழக்கம்போலவே சேவாக் குசும்பான பதிவு..! ரசிகர்கள் தக்க பதிலடி

அதேபோல இந்திய அணியின் கேப்டன் தோனி, கங்குலி உருவாக்கியிருந்த இந்திய அணியை மேலும் வளர்த்தெடுத்து வெற்றிகளை குவித்து கொடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை, டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனிதான். 

ரிக்கி பாண்டிங் - தோனி ஆகிய இருவருமே சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன்கள் தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்நிலையில், இருவரில் யார் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து கூறியுள்ளார்.

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடாதீங்க.. கேப்டன்சியில் பாபர் பெரிய ஜீரோ.. கேப்டனுக்கு தகுதியே இல்லாத வீரர்

இதுகுறித்து பேசிய பிராட் ஹாக், ரிக்கி பாண்டிங்கிடம் மிகச்சிறந்த அணி இருந்தது. தோனியிடமும் நல்ல அணி இருந்தது. என்னை பொறுத்தமட்டில் இருவருமே சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். கேப்டனாக இருவரும் நல்ல ரெக்கார்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் தோனி கடும் அரசியலை எதிர்கொண்டு அதையும் மீறி சாதித்திருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பாண்டிங் அந்தளவிற்கு அரசியலை எதிர்கொண்டிருக்கமாட்டார். அந்த ஒரு விஷயத்தில் பாண்டிங்கை விட தோனி சற்று முன்னிலை வகிக்கிறார். அதனால் தான் பாண்டிங்கை விட தோனி சிறந்த கேப்டன் என்று நான் கூறுகிறேன். என்னை மன்னிக்கவும் ரிக்கி (பாண்டிங்) என்று பிராட் ஹாக் கூறியுள்ளார்.
 

click me!