இந்தியா 10 வருசத்துல 2 டெஸ்ட் தோல்வி: பாகிஸ்தான் 9 மாசத்துல 3 டெஸ்ட் தோல்வி, என்ன வித்தியாசம் பாருங்க!

By Rsiva kumarFirst Published Dec 20, 2022, 4:17 PM IST
Highlights

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 

பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து அணி அங்கு 6 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்று விளையாடியது. 6 டி20 போட்டிகளில் 3 போட்டியில் இங்கிலாந்து அணியும், 3 போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றன. இதன் மூலம் இந்த டி20 சமனானது. இதையடுத்து, நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடாதீங்க.. கேப்டன்சியில் பாபர் பெரிய ஜீரோ.. கேப்டனுக்கு தகுதியே இல்லாத வீரர்

இதையடுத்து, கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் ஆடியது. முதல் இன்னிங்ஸில் 304 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 354 ரன்கள் சேர்த்து 54 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை அடிய பாகிஸ்தான் அணி 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 28.1 ஆவது ஓவரிலேயே 2 விக்கெட் இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது.

முதல் முறையாக ஒயிட் வாஷான பாகிஸ்தான், இதுல மோசமான சாதனை வேறு!

இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் 3 டெஸ்ட் தொடரையும் இழந்து ஒயிட் வாஷ் ஆனது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி கடந்த 9 மாதங்களில் சொந்த மண்ணில் 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. ஆனால், இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL Mini Auction 2023:எந்தஅணிக்கு கேப்டன் தேவை? ஏலத்தில் இடம்பெற்றுள்ள கேப்டன்சிக்கான வீரர்கள் யார்? ஓர் அலசல்

click me!