திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால், அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததா என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து வங்கதேசம் மற்றும் இலங்கைஅணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது. வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடக்கிறது.
40 பந்தில் 101 ரன்கள் குவித்து பேட்டை தூக்கி எறிந்து சர்ச்சையை ஏற்படுத்திய இந்திய வீரர்!
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடிய திலக் வர்மா, ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார். இந்த ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து தான் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த ஆசிய கோப்பை தொடரில் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடினால், உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
Asia Cup 2023: இந்திய அணி வீரர்களை சந்தித்து பேசிய ரிஷப் பண்ட்; வைரலாகும் வீடியோ!
உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் வரும் 3 ஆம் தேதி தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், திலக் வர்மா இந்திய அணியில் இடம் பெற்றது குறித்து ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய அணியில் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய திலக் வர்மாவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவரை பிடிக்காமல் அவரை அணியில் சேர்க்காமல் இருப்பது ஒன்றும் கிடையாது. அதே போன்று தான், ஒருவரை பிடித்துள்ளது என்பதாக அவரை அணியில் இடம் பெறச் செய்வது என்பதும் கிடையாது.
Asia Cup 2023: கேஎல் ராகுல் இல்லாமல் இலங்கை புறப்படும் ரோகித் சர்மா அண்ட் கோ!
ஒவ்வொரு முடிவிற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கும். யாரையாவது சேர்க்கவில்லை என்றால் சரியான விளக்கம் இருக்கும். சில சமயங்களில் சூழ்நிலைகள் தான் இதற்கு வழி வகுக்கிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.