Indian Cricket Team Head Coach: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமனம்!

Published : Jul 09, 2024, 09:07 PM ISTUpdated : Jul 09, 2024, 09:13 PM IST
Indian Cricket Team Head Coach: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமனம்!

சுருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிந்தது. டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் டி20 உலகக் கோப்பை டிராபியை முதல் முறையாக கையில் ஏந்தினார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிந்துள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடருக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

பாத்து பாத்து செதுக்கிய வீடு – நீச்சல் குளம், கார்டனிங், ஆடம்பரமான சொகுசு பங்களா – வீடியோ வெளியிட்ட கோலி!

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு ரிக்கி பாண்டிங், மகிலா ஜெயவர்தனே, கவுதம் காம்பீர், விவிஎஸ் லட்சுமணன் ஆகியோரது பெயர் அடிபட்டது. ஆனால், ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்று அப்போது கூறப்பட்டது.

இதற்கிடையில் கடந்த மாதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் நடத்தப்பட்டு இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாக் கூறியிருந்தார். அந்த புதிய தலைமை பயிற்சியாளரும் இலங்கை தொடரின் மூலமாக தனது பணியை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலா? வதந்திகளுக்கு மத்தியில் முதல் புகைப்படத்தை பகிர்ந்த அனுஷ்கா சர்மா!

இந்த நிலையில் தான் இலங்கை தொடர் வரும் 27 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜெய் ஷா கூறியிருப்பதாவது: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காமீரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது கிரிக்கெட் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கவுதம் காம்பீர் இதனை அருகில் இருந்து பார்த்து வருகிறார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளை கடந்து கிரிக்கெட்டில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல கவுதம் காம்பீர் தான் சிறந்தவர் என்று நம்புகிறேன்.

டி20 WC டிராபி வென்ற கையோடு சர்ச்சையில் சிக்கிய ரோகித் சர்மா: ஆளாளுக்கு வரிந்து கட்டி வரும் ரசிகர்கள்!

இந்திய அணிக்கு அவரது தெளிவான பார்வை மற்றும் சிறந்த அனுபவத்துடன் இணைந்து இந்த பயிற்சியாளர் பாத்திரத்தையும் ஏற்றுக் கொள்வதற்கு அவரை நிலைநிறுத்துகிறது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக புதிய பயணத்தை தொடங்கும் அவருக்கு பிசிசிஐ முழு ஆதரவும் அளிக்கிறது என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.

வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் தொடர்வார். காம்பீரைத் தொடர்ந்து இந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனவரும் ஜூலை மாதம் தொடங்கும் இலங்கைக்கு எதிரான தொடரின் மூலமாக கவுதம் காம்பீர் தனது பயணத்தை தொடங்க இருக்கிறார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!