ஏன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடினார்? காரணத்தை வெளியிட்ட பிசிசிஐ!

By Rsiva kumar  |  First Published Jul 29, 2023, 10:01 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து வந்ததற்கான காரணத்தை பிசிசிஐ தெரிவித்துள்ளது.


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி தற்போது 27ஆம் தேதி பிரிஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலமாக முதல் முறையாக இந்திய அணி டிரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளது.

WI vs IND First ODI Live Score: சஞ்சு சாம்சனுடைய ஜெர்சியை அணிந்து வந்த சூர்யகுமார் யாதவ்!

Tap to resize

Latest Videos

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 43 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சைப் பொறுத்த வரையில் குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் வீசி 6 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

திரும்ப வந்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பக்கா பிளான் போட்ட ரோகித் சர்மா: இந்தியா பீல்டிங் தேர்வு!

பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 118 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், இஷான் கிஷான் 52 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், அவர் சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து வந்து விளையாடினார். ஆனால், இதுவரையில் அதற்கான காரணம் குறித்து தெரியாமல் இருந்தது.

திருமணத்திற்கு பிறகு உத்தமராக வாழும் கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

இந்த நிலையில், ஏன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனின் ஜெர்சியை அணிந்து விளையாடினார் என்பதற்கான காரணத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ கூறியிருப்பதாவது: சூர்யகுமார் யாதவ்விற்கு வழங்கப்பட்ட கிட் அளவு மிகவும் சிறியதாக இருந்தது. போட்டிக்கு முன்னதாக நடந்த போட்டோஷூட் நிகழ்ச்சியின் போது அவர் சிறிய அளவு கொண்ட தனக்கு வழங்கப்பட்ட ஜெர்சியை தான் அணிந்திருந்தார்.

ஸ்டெம்பை உடைத்தல், நடுவர் மீதான சர்ச்சை கருத்து: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை!

ஆனால், போட்டியில் விளையாடும் போது கொஞ்சம் பெரிய அளவு கொண்ட ஜெர்சியை அணிந்து கொள்ள விரும்பினார். இது குறித்து எங்களுக்கு போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் தெரியவந்தது. டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ அனுப்பியுள்ளதால், 2ஆவது ஒரு நாள் போட்டிக்குப் பிறகு தான் சூர்யகுமார் யாதவ்விற்கு புதிய ஜெர்சி வழங்கப்படும். அதுவரையில், அவர் தனது சக வீரர்களின் ஜெர்சியை தான் அணிந்து விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

தாரூபாவில் நடக்க உள்ள 3ஆவது ஒரு நாள் போட்டியின் போது தான் சூர்யகுமார் யாதவ்விற்கு புதிய ஜெர்சி கிடைக்கும். அதன் பிறகு அவர் அந்த ஜெர்சியை அணிந்து கொண்டு டி20 தொடர் முழுவதும் விளையாடலாம். ஒருவேளை 2ஆவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் களமிறங்கினால், சூர்யகுமார் யாதவ் வேறொருவரது ஜெர்சியை அணிந்து விளையாடலாம். இல்லையென்றால், அவருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2024 தொடருக்கு தயாராகி வரும் எம்.எஸ்.தோனி: ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி!

விளையாட்டு ஜாம்பவான்களான அடிடாஸால் ஸ்பான்சர் செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஒயிட்-பால் தொடர் இதுவாகும். கரீபியன் சுற்றுப்பயணத்தின் போது இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தளவாடப் போராட்டங்களை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு டி20 போட்டி டிரினிடாட்டில் இருந்து செயின்ட் கிட்ஸ் செல்லும் அணியின் லக்கேஜ் போக்குவரத்து பிரச்சனையால் தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!