வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக அனில் கும்ப்ளே மற்றும் கபில் தேவ் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்று கைப்பற்றிய நிலையில், தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று பிரிஜ்டவுனில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.
சூர்யகுமார் யாதவ்விற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் மட்டும் பொறுமையாக ஆடி 43 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக மொத்தம் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 6 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 30 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகள் கைப்பற்றி அனில் கும்ப்ளே, கபில் தேவ் ஆகியோரது சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக 42 போட்டிகளில் விளையாடிய கபில் தேவ் 43 விக்கெட்டுகளும், 26 போட்டிகளில் விளையாடிய அனில் கும்ப்ளே 41 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர்.
முகமது ஷமி 18 போட்டிகளில் 37 விக்கெட்டுகளும், ஹர்பஜன் சிங் 31 போட்டிகளில் 33 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இஷான் கிஷான் 52 ரன்கள் எடுத்துக் கொடுக்க, ரோகித் சர்மா வின்னிங் ஷாட் அடிக்க இந்தியா எளிய வெற்றி பெற்றது.